இந்திய டெஸ்ட் பேட்டிங் வரிசை என்ன? ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா? – கில் கம்பீர் பேட்டி

0
495
Gill

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி செல்வதற்கு முன்னாலான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்கள்.

இந்திய அணி இந்த மாதம் 20ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் விளையாட இருக்கிறது. தற்போது இந்த தொடருக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் உடன் முக்கிய குழு கிளம்புவதற்கு முன்பாக, சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

- Advertisement -

பேட்டிங் வரிசை எப்படி அமையும்

முதலில் பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறும் பொழுது ” எனக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என்ற செய்திகள் கிடைத்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் என் அணிக்கு முன் நின்று விளையாடி உதாரணமாக இருக்க விரும்புகிறேன். கேப்டனாக இருந்தாலும் நான் பேட்டிங்கில் சிறப்பான முறையில் செயல்படுவதற்கு என்னால் முடிந்ததை செய்வேன். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பெரிய வீரர்கள் அவர்களுடைய இடத்தை நிரப்புவது கடினம்”

“எங்களுக்கு லண்டனில் 10 நாட்கள் கொண்ட முகாம் இருக்கிறது. மேலும் எங்கள் அணிக்கு உள்ளேயே பிரிந்து இரண்டு அணியாக பயிற்சி போட்டி ஒன்றில் விளையாட இருக்கிறோம். எனவே எங்களுக்கு நடுவில் நிறைய நாட்கள் இருக்கிறது. எனவே இதெல்லாம் முடிந்த பிறகுதான் பேட்டிங் வரிசை குறித்து சிந்திக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இதுகுறித்து பதில் அளித்துள்ள கவுதம் கம்பீர் பேசும் பொழுது “சிறந்த பேட்டிங் ஃபார்மில் யார் இருந்தாலும், தேவை ஏற்படும்பொழுது அவர்கள் நிச்சயம் அழைக்கப்படுவார்கள். மேலும் பும்ராவை மூன்று டெஸ்ட் போட்டியில் மட்டுமே வைப்போம் என்று முடிவு செய்யவில்லை. முடிவுகள் எப்படி வருகிறது மற்றும் தொடர் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொறுத்து நாங்கள் முடிவு செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 2007லயே சொன்னேன்.. என் இதயம் நொறுங்குகிறது.. ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் தேவையா? – கம்பீர் வருத்தம்

“மேலும் கருண் நாயரின் தனிப்பட்ட அனுபவமும் அவர் இங்கிலாந்தில் விளையாடியிருக்கும் அனுபவமும் இந்த தொடரில் நல்ல முறையில் பயன்படும்” என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே கருண் நாயர் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற பயிற்சி போட்டியில் இரட்டை சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் கருண் நாயர் பற்றி கம்பீர் பேசி இருப்பதால் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

- Advertisement -