2007லயே சொன்னேன்.. என் இதயம் நொறுங்குகிறது.. ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் தேவையா? – கம்பீர் வருத்தம்

0
208
Gambhir

ஐபிஎல் அணிகளின் வெற்றி கொண்டாட்டங்களும் சாலையில் பேரணி செல்வதும் அவசியம் இல்லாதவை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.

நேற்று ஆர்சிபி ஐபிஎல் தொடரை வென்றதை ஒட்டி நடைபெற்ற வெற்றி கொண்டாட்டம் துயர நிகழ்வாக மாறியது. இதில் பங்கேற்ற 11 ஆர்சிபி ரசிகர்கள் உயிரிழந்தார்கள். இதன் காரணமாக நாடெங்கும் இது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

- Advertisement -

புதிய கேப்டன் உடன் சந்திப்பு

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சுற்றுப்பயணத்திற்கு கிளம்புவதற்கு முன்னால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அடுத்து அணியை எப்படி கொண்டு செல்ல இருக்கிறோம்? தன்னுடைய பொறுப்பு என்ன? ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாதது அணியை எவ்வாறு பாதிக்கும்? என்று கேப்டன் சுப்மன் கில் நிறைய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதயம் இரங்குகிறது

இந்த நிலையில் இந்த முக்கியமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேற்று ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட துயரம் குறித்து கவுதம் கம்பீரிடம் கேள்வி முன் வைக்கப்பட்டது. ஏனென்றால் கேப்டனாக அவரும் கொல்கத்தா அணிக்கு கோப்பைகளை வென்று இருக்கிறார். கொல்கத்தா மைதானத்தில் வெற்றி விழா நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கில்லுக்கு வேலை ஈஸியா இருக்காது.. ஆனா சேவாக்க அதுல ஃபாலோ பண்ணா கலக்கலாம் – ரிக்கி பாண்டிங் அறிவுரை

இது குறித்து பதில் அளித்த கவுதம் கம்பீர் கூறும் பொழுது ” நான் வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் ரோட் ஷோ நடத்துவதை எப்பொழுதும் ஆதரித்தது கிடையாது. கூடாது என்று நான் 2007 ஆம் ஆண்டில் இருந்தே சொல்லி வருகிறேன். நமக்கு எல்லாவற்றையும் தாண்டி மக்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியமானது. வெற்றி கொண்டாட்டங்கள் எல்லாமே மூடிய கதவுகளுக்கு பின்னால் நடக்கலாம். இந்த துயரம் நிகழ்வில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பத்தை நினைத்து என்னுடைய இதயம் இரங்குகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -