கேரி கிரிஸ்டன் அப்பாவி போல நடிக்கிறார்.. இத்தனை மோசமான விஷயத்தை செஞ்சிருக்கார் – பாக் பசித் அலி விமர்சனம்

0
118
Basit

பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த பொழுது தவறான முடிவுகளை எடுத்து விட்டு தற்போது கேரி கிரிஸ்டன் அப்பாவி போல் நடிப்பதாக பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேரி கிரிஸ்டனை இரண்டு வருட ஒப்பந்தத்தில் வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வந்தது. தற்பொழுது அவர் ஆறு மாத காலத்தில் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார்.

- Advertisement -

அப்பாவி போல நடிக்கிறார்

இதுகுறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது “கேரி கிரிஸ்டன் இப்பொழுது அப்பாவி போல நடிக்கிறார். பாபர் அசாம் அணியில் இல்லை என்றால் பயிற்சியாளராக தொடர மாட்டேன் என்று கூறினார். எப்படி ஒரு தனி மனிதனுக்காக அணி இயங்கும். முகமது ஹாரிசை கேப்டனாக கொண்டுவர விரும்பினார். ஆனால் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரை அவர்களுடன் சென்று இவர் பார்க்கவில்லை. இவர் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்தார்”

“கேரி கிரிஸ்டன் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது ரிஸ்வான் இருவரையும் கேப்டனாக கொண்டு வர விரும்பவில்லை. இது பாகிஸ்தானின் அணியா அல்லது இவருடைய அணியா? இதன் காரணமாகத்தான் ஜாவேத் அகீப் தற்பொழுது வரவேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது”

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் மோசமடைந்து வருகிறது

“சரியான நேரத்தில் கேரி கிரிஸ்டன் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். இது மிகவும் நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் நிறைய அரசியல் இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் மோசம் அடைந்து வரும் சூழ்நிலையில், நான் இது குறித்து எதுவும் பேசக்கூடாது என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க : 575/6.. கலக்கிய தென் ஆப்பிரிக்க.. 8வது இடத்தில் அசத்திய தமிழர்.. பங்களாதேஷ் அணி பரிதாபம்

“கேரி கிரிஸ்டன் மிகவும் நல்லவர் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி அவர் என்ன பெரிய நல்லவை செய்துவிட்டார்?அவர் தன்னுடைய நல்ல நேரத்தை எல்லாம் பாகிஸ்தான அணியில் வீணடித்து விட்டார். அடுத்து பிஎஸ்எல் அல்லது ஐபிஎல் தொடரில் பயிற்சியாளர் பதவிக்கு செல்ல முயற்சி செய்வார். தென் ஆப்பிரிக்கா கேப்டவுனில் அவர் சொந்தமாக கிரிக்கெட் அகாடமி நடத்துகிறார். இப்படிப்பட்டவர்களை எதற்காக பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வருகிறீர்கள்? ஏனென்றால் இவர்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் காக நேரம் செலவு செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -