லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்த டெஸ்ட் தொடரில் வீரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தற்போது தொடரில் இரண்டு அணிகளும் சமநிலையில் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இதில் வெற்றி பெற்று முன்னிலை பெறுவதற்கு இரண்டு அணிகளும் விரும்பும்.
இந்த தொடரில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் வகைப்பந்துகள் விரைவாக மென்மை தன்மை கொண்டதாகவும், இல்லையெனில் தனது வடிவத்தை மிகவும் விரைவாக இழந்து விடுவதாகவும் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார். இதனால் வீரர்கள் எரிச்சல் அடைகிறார்கள் எனவும், இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல எனவும் சில முக்கிய விஷயங்களை அவர் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நிச்சயமாக பந்து தனது வடிவத்தை இழந்து வருவதால் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்று நான் கூறுவேன். இது நம்மைப் பொறுத்தது அல்ல. பார்வையில் நீங்கள் விளையாடும் போது பந்தின் வடிவத்தை காணலாம். ஆனால் விரைவாக அது தன் வடிவத்தை இழக்கும் போது விளையாடுவதற்கு பிரச்சனையாக மாறுகிறது. இருப்பினும் சில விதிகள் இப்படித்தான் இருக்கின்றன.
இதையும் படிங்க:இந்திய டெஸ்ட் ஆடுறோம்.. அதனால ஆர்ச்சருக்கு இந்த சலுகை நான் தரவே மாட்டேன்.. இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்
இந்தத் தொடரில் பந்து மிகவும் தனது வடிவத்தை இழந்து வருகிறது. இது போன்ற பிரச்சனை இதற்கு முன்பு நான் வேறு எங்கும் பார்த்தது கிடையாது. ஒவ்வொரு பந்தும் தனது வடிவத்தை வேகமாக இழப்பதால் இது வீரர்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. இதனால் விரைவாக பந்தை மாற்றியவுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு விளையாட ஏதுவாக உள்ளது. இதனால் ஒரு பேட்டராக நீங்கள் இதற்கு தகுந்தவாறு செயல்பட வேண்டும். இருப்பினும் இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல” என ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்