பாபர் ரிஸ்வான்.. 3 வாரம் அனுமதி மறுப்பு.. ஒரு வருட சம்பளத்தை விட அதிகம் இழந்த சோகம்

0
1319
Pakistan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளின் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்பொழுது அவர்களின் பணிச்சுமை மேலாண்மையை நிர்வகிப்பதற்காக நட்சத்திர வீரர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பெரிய அளவில் கை வைத்திருக்கிறது.

இந்திய வீரர்களை விட ஏழு எட்டு மடங்கு குறைந்த சம்பளத்தை பெற்று வரும் பாகிஸ்தான் வீரர்கள், இங்கிலாந்து மற்றும் கனடாவில் நடைபெறும் டி20 லீக்குகளில் விளையாடி பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு வருடத்திற்கு சம்பாதிப்பதை விட அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வித்தியாசமான நடவடிக்கை எடுத்திருக்கிறது.

- Advertisement -

அடுத்த வருடம் முடிவு வரையில் தலா 9 டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள், 14 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் விளையாட இருக்கிறது. எனவே வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறது.

இந்த மாதத்தில் இங்கிலாந்தில் 100 பந்து போட்டியில் நடக்க இருக்கிறது. இதில் பர்மிங்காம் பீனிக்ஸ் அணிக்கு நசிம்ஸா இந்திய ரூபாய் மதிப்பு படி 1.25 கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பி கிரேடில் ஒரு வருடத்திற்கு அவர் பெரும் சம்பளத்தை விட இந்தத் தொகை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம் முகமது ரிஸ்வான் மற்றும் ஷாகின் அப்ரிடி ஆகியோர் கனடா குளோபல் டி20 லீக்கில் விளையாடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு மூன்று வாரம் கிரிக்கெட் விளையாடுவதற்கு 1.60 கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்கப்படுகிறது. இவர்கள் தோராயமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏ கிரேடில் 1.40 கோடி ரூபாய் அளவுக்குதான் சம்பளம் தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஓடிஐ டெஸ்டில் ஓய்வு எப்போது.?.. வெளிப்படையாக பதில் சொன்ன ரோகித் சர்மா.. சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது

தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களிடம் காட்டி வரும் கண்டிப்பால் வீரர்கள் தங்கள் ஒரு வருடத்திற்கு பெரும் சம்பளத்தை விட அதிக பணத்தை வெளியில் இருந்து இழந்து வருகிறார்கள். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இனி நியமிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு பயிற்சியாளர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -