இந்தியா டி20 ஆடினாங்க.. அவங்க திட்டமே எங்களுக்கு தெரியல.. எல்லாம் முடிஞ்சு போச்சு – மெஹதி ஹசன் மிராஸ் பேச்சு

0
3481
Mehidy

இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போல விளையாடிவிட்டார்கள் என பங்களாதேஷ் ஆல் ரவுண்டர் மெஹதி ஹசன் மிராஸ் கூறியிருக்கிறார்.

பங்களாதேஷ் அணி 74 ஓவர்கள் விளையாடி 233 ரன்கள் முதல் இன்னிங்சில் எடுக்க, இந்திய அணியோ வெறும் 34 ஓவர்கள் மட்டும் விளையாடி ஒன்பது விக்கெட் மட்டும் இழந்து 285 ரன் எடுத்து டிக்ளேர் செய்து ஆச்சரியப்படுத்தியது. இதன் காரணமாக போட்டி தற்போது முடிவு காணும் சூழ்நிலையை எட்டி இருக்கிறது.

- Advertisement -

டி20 கிரிக்கெட் போல விளையாடினார்கள்

இது குறித்து பங்களாதேஷ் ஆல் ரவுண்டர் மெஹதி ஹசன் மிராஸ் கூறும் பொழுது “உண்மையில் அவர்கள் ஒரு திட்டத்துடன் வந்து விளையாடினார்கள். அதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். எங்களுக்கு அவர்களுடைய திட்டம் மூன்றாவது ஓவருக்கு பிறகுதான் தெரிந்தது. நாங்கள் எங்களுடைய பலத்துக்கு விளையாடி எங்களுடைய இன்னிங்ஸ் சேதத்தை தவிர்க்க முயற்சி செய்தோம்”

“டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் இன்று வித்தியாசமான காட்சிகளை பார்த்தீர்கள். அணி டி20 கிரிக்கெட் போல விளையாடினார்கள். அவர்கள் வெற்றியை நோக்கி விளையாடுவதை திட்டமாக வைத்திருந்தார்கள். இதற்காக அவர்களது பேட்டிங் யூனிட்டில் மேலிருந்து கீழ் வரையில் எல்லோரும் ரன்களுக்காகவே விளையாடினார்கள்”

- Advertisement -

இனி எங்களால் வெல்ல முடியாது

மேலும் பேசிய மெகதி ஹசன் மிராஸ் கூறும்பொழுது “வெற்றிக்காக நாங்கள் விளையாட வேண்டும் என்றால் எங்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் ஒரு இலக்கை கொடுத்து அதற்குப் பிறகு அவர்களுடைய 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். எங்களுக்கு இருப்பதோ ஒரு நாள் மட்டும் தான். எனவே நாங்கள் வெற்றியை பற்றி நினைப்பதை விட டிரா நோக்கி விளையாட வேண்டும்”

இதையும் படிங்க : காலைல இத சொல்லி தான் அனுப்புனோம்.. 2 நாள் போனா பரவால.. ஆனா எங்க திட்டம் இதுதான் – இந்திய பவுலிங் கோச் பேட்டி

“டெஸ்ட் போட்டியில் எப்பொழுதும் முதல் இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது. எங்களுடைய முதல் இன்னிங்ஸில் மோமினுல் பாய் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஆனால் அவருக்கு எங்களால் சரியான ஆதரவு கொடுக்க முடியவில்லை. அப்படி நாங்கள் யாராவது சரியான ஆதரவு கொடுத்திருந்தால் போட்டி தற்போது வித்தியாசமாக இருந்திருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -