இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நாளை ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நேர்மறையான அணுகுமுறை குறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன மோர்னே மோர்கல் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. அதற்குப் பின்னர் அதற்கு அடுத்து இரண்டு நாட்களிலும் பெய்த கன மழையால் ஆட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு ஒரு ஓவர் கூட வீசவில்லை.
இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் என்ற நிலையில் இருந்த வங்கதேச அணி அதற்குப் பிறகு 233 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதம் இருந்த ஏழு விக்கெட்டுகளையும் இழந்தது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிசை அதிரடியாக விளையாடிய இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதற்குப் பிறகு தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் வங்கதேச அணி 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருக்கிறது.
எனவே குறைந்த ரன்களுக்குள்ளாக இந்திய அணி வங்கதேச அணியை கட்டுப்படுத்தி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் மிக தீவிரமாக செயல்பட்டு வரும் இந்திய அணியை பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்கல் பாராட்டி பேசியிருக்கிறார்.
இதுகுறித்து போட்டி நடைபெறுவதற்கு முன்பாக அவர் கூறும் போது ” வெற்றிக்காக போராட வேண்டும் என்பதே எங்களுடைய செய்தியாக இன்று இருந்தது. இரண்டு நாட்களை நாங்கள் இழந்து விட்டோம்.எனவே இன்று வெற்றி பெற வேண்டும் என்ற செய்தியை மட்டும் எடுத்துக் கொண்டு நேர்மறையான சிந்தனையோடு அணுகினோம். எங்களது நேர்மறையான எண்ணத்தை காட்ட விரும்பினோம். இந்த டெஸ்ட் போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. நிறைய கிரிக்கெட் விளையாடவும் மற்றும் நிறைய நேரமும் இருக்கிறது.
இதையும் படிங்க:என்கிட்ட அப்போ ஷூ வாங்க கூட பணம் இருக்காது.. இப்ப நான் இந்தியாக்கு ஆட காரணமே என்னோட கோச்தான்- மயாங்க் யாதவ் பேட்டி
வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதை பார்க்கும்போது நம்ப முடியாத வகையில் இருந்தது. அதை பேட்டிங்கிலும் வெளிக்காட்டியது அருமை. ஒரு பந்துவீச்சு யூனிட்டாக வெற்றிக்கான வேகத்தோடு பேட்ஸ்மேன்கள் செயல்படுவார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால் அதுவும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது” என்று கூறி இருக்கிறார்.