பேட்ஸ்மேன் 1000 ரன்கள் அடிச்சாலும் யூஸ் இல்லை.. இனி பவுலர்களை கொண்டாடுங்க – கம்பீர் வெளிப்படையான பேச்சு

0
258
Gambhir

இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை பெரிய அளவில் பேசக்கூடியவர்கள், இனி போட்டிகளில் வெற்றி பெற வைக்கும் பந்துவீச்சாளர்களை பற்றி பேச வேண்டும் எனவும் இந்திய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.

நாளை மறுநாள் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங் பாரம்பரியம்

இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை கொண்டாடும் நாடாகவே இருந்து வந்திருக்கிறது. பந்துவீச்சில் பெரிய அளவில் சாதனைகளை செய்தவர்களுக்கான அங்கீகாரம் மிகவும் குறைவாகவே கிடைத்திருக்கிறது. அவர்கள் மீதான புகழ் வெளிச்சமும் பேட்ஸ்மேன்கள் அளவுக்கு இருந்ததில்லை.

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் பேட்ஸ்மேன்களான சுனில் கவாஸ்கர் சச்சின் டெண்டுல்கர் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி, ரோஹித் சர்மா என வரலாறு எங்கும் பேட்ஸ்மேன்களே மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுபவர்களாக இருந்து வருகிறார்கள்என்பது வெளிப்படையான உண்மை.

- Advertisement -

பேட்ஸ்மேன்கள் மீதான வெறி போதும்

இதுகுறித்து பயிற்சியாளர் கம்பீர் கூறும் பொழுது “பேட்ஸ்மேன்கள் மீதான வெறித்தனமான கொண்டாட்டம் மனநிலை முடிவுக்கு வர வேண்டிய காலகட்டம் இது. மேலும் அது முடிவுக்கு வர வேண்டியது முக்கியம். ஆயிரம் ரன்கள் பேட்ஸ்மேன்கள் எடுப்பதால் ஒரு போட்டியை வென்று விட முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனால் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினால் ஒரு போட்டியில் வெல்லலாம் என்பதற்கு 99% உத்தரவாதம் இருக்கிறது”

இதையும் படிங்க : இங்க டார்கெட் ஷாகின் அப்ரிடிதான்.. எங்க கேப்டன் நல்ல இங்கிலீஷ் பேசி ஏமாத்துறார் – பாக் பசித் அலி விமர்சனம்

“கிரிக்கெட்டில் எந்த வடிவமாக இருந்தாலும் உங்களை போட்டிகளில் வெற்றி பெற வைப்பது பந்துவீச்சாளர்கள்தான். எனவே வரவிருக்கும் சகாப்தத்தில் பேட்ஸ்மேன்களை விட நாம் பந்துவீச்சாளர்களை அதிகம் பேசுவோம் என்று நம்புகிறேன். காலப்போக்கில் மனநிலை மாறும் என்றும் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -