இந்திய கிரிக்கெட்

நாங்க யாருக்கும் பயப்பட மாட்டோம்.. ஆஸியை பத்தி ஏன் யோசிக்கணும்?.. எங்க ஸ்டைல் வேற – கம்பீர் விளக்கம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் எனவும் அதே சமயத்தில் எது குறித்தும் அதிகமாக யோசிக்க மாட்டோம் எனவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி நாளை மறுநாள் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் மோத இருக்கிறது. இன்று தன்னுடைய பிறந்தநாளில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்

நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம்

கத்திரிக்கையாளர் சந்திப்பில் கம்பீர் பேசும் பொழுது “நியூசிலாந்து முற்றிலும் மாறுபட்ட சவாலை கொடுக்கக்கூடிய அணியாகும். அவர்கள் ஒரு தொழில்முறையான யூனிட். எங்களை காயப்படுத்தக்கூடிய சில தரமான வீரர்களை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அவர்களால் அதைச் செய்ய முடியும்”

“நாங்கள் நிச்சயமாக அவர்களை மதிக்கிறோம். ஆனால் அவர்கள் குறித்து நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் தன்னலமற்றவர்களாக அடக்கமானவர்களாக இருப்போம். ஒவ்வொரு போட்டியிலும் மைதானத்தில் கடும் போட்டியை கொடுக்க உழைப்போம். களத்தில் கடினமாகவும் போட்டி முடிந்த பின் வெளியில் அடக்கமாகவும் இருப்போம் என நான் பலமுறை கூறியிருக்கிறேன்”

- Advertisement -

அதிக தூரம் யோசிக்க மாட்டோம்

மேலும் பேசிய கம்பீர் ” முதல் விஷயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர். ஆனால் இந்த இரண்டுக்கும் முன்னால் நாங்கள் தற்போது எங்களிடம் இருக்கும் நியூசிலாந்து தொடர் பற்றிதான் யோசிக்கிறோம்”

இதையும் படிங்க : யார் சொன்னா.. பாபர் அசாமை டீமை விட்டு தூக்கிட்டோம்னு.. உண்மையில் நடந்தது இதுதான்- பாகிஸ்தான் துணை பயிற்சியாளர் பேட்டி

“நாங்கள் இப்பொழுது ஒரு சர்வதேச போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டிய தேவையே கிடையாது. நவம்பர் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு நியூசிலாந்து அணிக்கு எதிராக எப்படி களமிறங்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. அவ்வளவு தூரம் எல்லாம் யோசிக்க கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by