ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறாவிட்டால் அவருடைய இடத்திற்கு இளம் பந்துவீச்சாளர் ஒருவரை கொண்டுவர வேண்டுமென ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ கூறியிருக்கிறார்.
இந்திய அணி அடுத்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் பெர்த் மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதுகிறது.
ஷமியின் உள்ளே வெளியே விளையாட்டு
கடந்த மாதத்தில் ஷமி வழக்கமான பயிற்சிகளில் காயத்திலிருந்து மீண்டு வந்து ஈடுபட ஆரம்பித்து இருந்தார். எனவே அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே இந்திய அணியில் இடம் பெறலாம் என்ற அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இல்லை.
மேலும் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறுவாரா? என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஷமி மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபடக்கூடிய வீடியோக்கள் வெளியில் வந்தன. தற்போது இந்திய அணிக்கு உள்ளே அவர் வருவாரா? அல்லது வெளியே போவாரா? என்கின்ற ஆட்டம் ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது.
இந்தப் பையன கொண்டு வாங்க
இது குறித்து பிரெட் லீ கூறும் பொழுது “லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நிர்வாகம் மயங்க் யாதவை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தது. இந்தியாவில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் யார் எவ்வளவு கிரிக்கெட் விளையாடினார்கள் விளையாடவில்லை என்று பார்ப்பதில்லை. அவர் தயாராக இருக்கிறாரா? என்று மட்டுமே பார்க்கிறார்கள். மயங்க் யாதவ் போன்ற ஒருவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசினால் வசதியாக எந்த பேட்ஸ்மேனாலும் விளையாட முடியாது”
இதையும் படிங்க : கம்பீர் ரோகித்துக்கு பொது அறிவே இல்லை.. ரெண்டு பேரும் செஞ்ச அந்த விஷயம் மோசமானது – மனோஜ் திவாரி விமர்சனம்
“மயங்க் யாதவ் முழுமையான பேக்கேஜ் கொண்ட ஒரு வீரர் போல தெரிகிறார். ஷமி தயாராக இல்லை என்றால் குறைந்தபட்சம் அவரை ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கவாவது செய்ய வேண்டும. நிச்சயம் எங்களுடைய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.