சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி தேர்வு குறித்து எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக முதல்முறையாக யுவராஜ் சிங் தந்தை நல்ல முறையில் பேசி இருக்கிறார். மேலும் அவர் தேர்வு குழுவினருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக கருத்துக்களை தெரிவிக்க கூடியவர். அவர் வெளியில் வந்து ஒரு பேட்டி கொடுத்து விட்டு சென்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு சோசியல் மீடியாவில் அது பெரும் பரபரப்பை உண்டாக்கும் விதமாக அமைந்திருக்கும். ஆனால் இந்த முறை அவர் இந்திய அணியின் தேர்வை பாராட்டி பேசி இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி
இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் மிகவும் மோசமாக செயல்பட்டு இருந்தது. இதன் காரணமாக இந்திய அணியில் இருந்து யார் நீக்கப்படுவார்கள்? என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. அதிரடியாக கேப்டன் ரோகித் சர்மாவையே நீக்குவார்களா? என்கின்ற எதிர்பார்ப்பும் கூட இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இப்படியான நிலையில் முகமது சிராஜை அதிரடியாக நீக்கிவிட்டார்கள். இதைத்தொடர்ந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய இடத்தில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
யோக்ராஜ் சிங் தெரிவித்த வாழ்த்து
இந்திய அணியின் தேர்வு குறித்து பேசி இருக்கும் யோகராஜ் சிங் கூறும் பொழுது “இந்திய அணிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக்குழு இருப்பதற்கு, நான் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்கும் மிகவும் முக்கியமானவர்கள் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்”
“நீங்கள் அவர்கள் இருவரையும் அணியை விட்டு நீக்குவது அணியை பலவீனப்படுத்துவதாகத்தான் அமையும். ஆஸ்திரேலியாவில் இந்த முறை நாம் பின்னடைவை சந்தித்து இருக்கிறோம் என்பது உண்மை. அதே சமயத்தில் நாம் அவர்களை அவர்களது நாட்டில் வைத்து இரண்டு முறை டெஸ்ட் தொடரில் வென்று இருக்கிறோம் என்பதையும் மறந்து விடக்கூடாது”
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் தப்பு செய்கிறார்.. இந்த காரணத்தால் அவரை செலக்ட் பண்ணல – ஆகாஷ் சோப்ரா பேச்சு
“விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கில் என குறிப்பிட்ட ஐந்து அல்லது ஆறு வீரர்கள் அணி தேர்வின்போது நெருக்கடியை சந்திப்பார்கள் என்று நான் நினைத்தேன். இருந்தாலும் நான் அவர்களுக்கு ஆதரவாகவே இருந்தேன். தற்போது சிறந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சிந்தனை செயல் குழுவுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.






