சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த திலக் வர்மா குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துகளை கூறுகிறார்.
இந்திய அணியை காப்பாற்றிய திலக் வர்மா
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானிக்க, அதன் பிறகு பேட்டிங் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர் 45 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கிய நிலையில் இங்கிலாந்து வீரர்கள் தங்களது அதிவேகமான பந்துவீச்சால் இந்திய அணியை சீர்குலைத்தனர்.
ஆனால் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய திலக் வர்மா மட்டும் ஆட்டத்தின் சூழ்நிலையை தெளிவாக உணர்ந்து கடைசி வரை எடுத்துச் சென்றார். 55 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 72 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா திலக் வர்மா ஆடிய விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சேப்பாக்கம் தோனியின் வீடு
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “திலக் வர்மா நிச்சயமாக அவர் ஒரு சூப்பர் ஸ்டார். நாம் சில சமயங்களில் ஒரு வீரரை சூப்பர் ஸ்டார் என்று சீக்கிரம் அழைக்கிறோம். இப்போதெல்லாம் நாம் ஒருவரை ஜாம்பவான் அல்லது சிறந்தவர் என ஆரம்பத்திலேயே அழைக்கிறோம். திலக் வர்மாவை நான் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் என்று அழைக்கவில்லை. ஆனால் இப்போது அவர் அதன் வழியில் இருக்கிறார். அவர் கடைசி வரை இந்திய அணிக்காக நின்று விளையாடினார்.
இதையும் படிங்க:121 ரன் 79 பந்து.. வில்லியம்சன் கிளாஸன் போராட்டம் வீண்.. 31 பந்துகள் மீதம்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ வெற்றி.. எஸ்ஏ டி20
அவர் தனது விக்கெட்டை இழக்கவில்லை. 18 ரன்கள் தேவைப்பட்டது 8 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தன. அவர் ஏற்கனவே 5 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். மேலும் அவர் மூன்று சிக்ஸர்கள் அடிக்க முயற்சித்து இருக்கலாம். இருப்பினும் அவர் ஆழமாக சென்று ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்றார். போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இது மகேந்திர சிங் தோனியின் வீடு. எனவே திலக் வர்மா இலக்கை துரத்தும் போது ஆழமாகவே செல்ல வேண்டும்” என்று ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.