இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆட்டம் ஓவர்..முன்னணி வீரர்கள் விலகல்?

0
559

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்  போட்டியில் பங்கேற்கிறது. கடந்த முறை நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி, தற்போது பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் இந்திய அணி பிளேயிங் லெவன் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தற்போது எந்த வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்ப்போம். இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை.

தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் இருக்கிறார். இதேபோன்று இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கிய நபராக இருப்பார்கள். அந்த இடத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெயதேவ் உனாட்கட் தற்போது காயம் காரணமாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அன்னிக்கு திரும்பிய ஜெய்தேவ் உனாட்கட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். அதே போன்று இந்திய அணியின் நட்சத்திர வீரரான ராகுல் பில்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது. இதனால் ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

- Advertisement -

ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தி பேட்டிங் வரிசையை வலுப்படுத்தலாம் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது அவருக்கு ஏற்பட்ட காயம் பெரும் பின்னடைவை இந்தியாவுக்கு கொடுத்துள்ளது. நடுவரசையில் இந்திய அணியை காப்பாற்றும் பொறுப்பில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல் தகுதியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதேபோன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரிஷப் பந்த் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் அவரும் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க மாட்டார். இப்படி முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி இந்தத் தொடரில் களமிறங்குகிறது. இவர்களுக்கு மாற்றுவீராக சர்பிராஸ் கான், ருதுராஜ் ஆகியோரை பிசிசிஐ அனுப்ப திட்டமிட்டுள்ளது.

- Advertisement -