இந்திய கிரிக்கெட்

அணியில் இடம் நிரந்தரமா தெரியாது? 6 மாதம் இந்த பயிற்சி செஞ்சிட்டு வரேன் – வருண் சக்கரவர்த்தி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற் பங்கு வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி டி20 கிரிக்கெட் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

பந்துவீச்சில் கலக்கும் வருண் சக்கரவர்த்தி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவின் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இது இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த சூழ்நிலையில் டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ஆல் ரவுண்டர்களின் தேவை என்பது அதிகமாக இருக்கிறது. ஒரு பந்துவீச்சாளர் பவுலிங் செய்வதோடு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிப்படுத்தினால் அது அணியில் அவரது இடத்தை நிரந்தரமாக உறுதி செய்ய வழிவகை செய்கிறது. ஒரு அணியில் தேவைக்கேற்ப ஆல்ரவுண்டர்கள் இருந்தும் இக்கட்டான சூழ்நிலைகளில் போட்டி கடைசி விக்கெட் வரை செல்வதால் பேட்டிங் தெரிந்த பந்து வீச்சாளர்கள் ஒரு அணிக்கு அவசியமாகிறார்கள். இந்த சூழ்நிலையில் வருண் சக்கரவர்த்தி இது குறித்து சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆறு மாத காலமாக இதை செய்கிறேன்

இதுகுறித்து அவர் விரிவாக பேசும் போது “கடந்த ஆறு மாதங்களாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரின் கீழ் நான் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். நான் பேட்டிங் சம்பந்தமான வீடியோக்களை பார்க்கிறேன். ஒரு பேட்ஸ்மேன் எந்தப் பகுதியில் ஹிட்டிங் செய்கிறார். ஒரு புதிய ஷாட் ஒன்றை கண்டுபிடித்தாரா? அவரது ரிலீஸ் ஷாட் எந்த பகுதியில் இருந்து வருகிறது என்பது போன்ற விஷயங்களை ஆராய்கிறேன்.

இதையும் படிங்க:கான்வே போராட்டம் வீண்.. பவுலிங்கில் கலக்கிய மார்க்கோ ஜான்சன்.. 14 தோல்வியடைந்த சூப்பர் கிங்ஸ்.. எஸ்ஏ டி20 லீக்

மேலும் எங்களது ட்ரெஸ்ஸிங் ரூம் சூழ்நிலை வெளிப்புற விஷயங்களில் பாதிப்படையாது. மேலும் இந்தியாவில் உள்நாட்டு தொடரான சையது முஸ்தாக் அலி டிராபி தொடரில் விளையாடியது எனக்கு பெரிய அளவில் உதவி இருக்கிறது. அது போன்ற சிறிய மைதானங்களில் ஒரு சுழற் பந்துவீச்சாளருக்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவே இது சென்னை மைதானத்தில் விளையாடும் போது பெரிய உதவியை கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts