கான்வே போராட்டம் வீண்.. பவுலிங்கில் கலக்கிய மார்க்கோ ஜான்சன்.. 14 தோல்வியடைந்த சூப்பர் கிங்ஸ்.. எஸ்ஏ டி20 லீக்

0
363

நேற்று நடைபெற்ற எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 19 ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

எஸ்ஏ டி 20 கிரிக்கெட் லீக்

செயிண்ட் ஜார்ஜ் பார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் கலமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜாக்ராவ்லி 6 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய அபெல் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பெடிங்காம் உடன் ஜோடி சேர்ந்து 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். 23 ரன்னில் விளையாடி கொண்டிருந்தபோது அபெல் வெளியேறினார்.

அதற்குப் பின்னர் களம் இறங்கிய கேப்டன் மாரக்ரம் பெடிங்காம் கூட்டணி நான்காவது விக்கெட்டுக்கு 39 பந்துகளில் 44 ரன்கள் குவித்தது. இதில் பெடிங்காம் 34 பந்துகளில் 37 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் ஓரளவு அதிரடியாக விளையாடிய கேப்டன் மார்கரம் 29 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 43 ரன்கள் விளாசினார். அதற்குப் பின்னர் கள்ளம் இறங்கிய ஸ்டெப்ஸ் 22 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது.

- Advertisement -

கான்வே போராட்டம் வீண்

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. இதில் கான்வே மற்றும் கேப்டன் டூப்ளிசஸ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவர்களில் 34 ரன்கள் எடுத்தது. இதில் பாப் 18 பந்துகளில் 5 பவுண்டரிகளோடு 27 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கான்வே நன்றாக விளையாடி 40 பந்துகளில் ஐந்து பௌண்டரிகளுடன் 43 ரன்னில் வெளியேற, அதற்குப் பின்னர் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இதையும் படிங்க:வெறும் 3 விக்கெட்.. முதல் இந்திய வீரராக சாதனை படைக்கப் போகும் அர்ஸ்தீப் சிங்.. இங்கிலாந்து டி20.. முழு விபரம்

முன்னணி வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியதால், சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் பந்துவீச்சில் கலக்கிய மார்க்கோ ஜான்சன் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அவரே ஆட்ட நாய்களாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலமாக சன்ரைசர்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -