கில் மட்டும் கிடையாது.. இந்த பேட்ஸ்மேனும் எங்களுக்கு 3 ஃபார்மேட் பிளேயர்தான் – அஜித் அகர்கர் பேச்சு

0
394
Gambhir

இன்று இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள். இதில் எதிர்கால இந்திய கிரிக்கெட் குறித்து நிறைய விஷயங்களை இருவரும் பகிர்ந்து இருக்கிறார்கள். சுப்மன் கில்லை மூன்று ஃபார்மேட்க்கான வீரர் என்று கூறிய அஜித்த அவர்கள் இன்னொரு பேட்ஸ்மேனையும் குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கம்பீர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உடல் தகுதியுடன் இருந்தால் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்று கூறியிருந்தார். மேலும் விராட் கோலி உடன் நல்ல நட்பு தொடர்ந்து வருவதாகவும் பேசி இருந்தார்.

- Advertisement -

மேலும் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ருதுராஜ் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரை தேர்வு செய்ய முடியாதது குறித்து பேசும் பொழுது ரிங்கு சிங் போலவே அவர்களையும் தேர்வு செய்ய முடியவில்லை என்றும் இது அவர்கள் கடினமாக நினைப்பார்கள் என்றும் பேசி இருந்தார்.

மேலும் அவர் சுப்மன் கில்லை மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கான வீரர் என்றும், அவர் அதற்கான திறமையோடு இருக்கக்கூடியவர் என்றும் கூறியிருந்தார். இதனால் ருதுராஜை தேர்வு செய்ய முடியாததை நியாயப்படுத்தி பேசி இருந்தார். இதன் மூலம் சுப்மன் கில் இந்திய கிரிக்கெட்டில் எதிர்கால கேப்டனாக கொண்டுவரப்படுவார் என்பது தெரிகிறது.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பேசிய அஜித் அகர்கர் கூறும்பொழுது “எங்களுக்கு ரிஷப் பண்ட் ஒரு முக்கிய வீரராக இருக்கப் போகிறார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் என்ன செய்திருக்கிறார் என்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அவர் ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட தனது பேட் மூலம் போட்டியை வென்றார்.அவர் இந்திய அணிக்காக அனைத்து வடிவங்களிலும் விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சச்சின் சாதனையை ஜோ ரூட் உடைப்பது உறுதி.. 3 மாசத்துல இங்கிலாந்து இந்த மாதிரி மாறிடுச்சு – மைக்கேல் வாகன் கருத்து

அதே சமயத்தில் எதிர்கால இந்திய கேப்டனாக மூன்று வடிவத்திலும் ரிஷப் பண்ட் இருப்பார் என்று அவர் விபத்தில் சிக்குவதற்கு முன்னால் பரவலான பேச்சுகள் இருந்தது. ஆனால் தற்பொழுது அவரை மூன்று வடிவத்தில் வீரராக மட்டுமே தொடர இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது என்று தெரிகிறது.