சச்சின் சாதனையை ஜோ ரூட் உடைப்பது உறுதி.. 3 மாசத்துல இங்கிலாந்து இந்த மாதிரி மாறிடுச்சு – மைக்கேல் வாகன் கருத்து

0
394
Root

நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதம் அடித்தார். இது அவருக்கு 32 ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாக அமைந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் அதிக ரன்கள் மற்றும் அதிக சத சாதனையை ஜோ ரூட் நிச்சயம் முறியடிப்பார் என்று கூறி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ஜோ ரூட் 11,942 ஒட்டு மொத்தமாக குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் நீடிக்கிறார். மேலும் அவர் 32 டெஸ்ட் சதங்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 15,921 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் 51 சதங்கள் மற்றும் 68 அரை சதங்கள் அடித்திருக்கிறார். இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அலைஸ்டர் குக் 12,472 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஜோ ரூட் பற்றி பேசிய மைக்கேல் வாகன் “ஜோ ரூட் அடுத்த சில மாதங்களில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் ஆக மாறுவார். மேலும் அவர் நிச்சயமாக சச்சின் டெண்டுல்கரை முந்துவார். மேலும் இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கில் கடந்த காலத்தைப் போல பொறுப்பேற்றவர்களாக தெரியவில்லை. அவர்கள் வேகமாக ரன்கள் அடிக்கிறார்கள் ஆனால் ஈகோவுடன் மோதுவதில்லை. அவர்கள் சிறந்த அறிவுடன் விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் பேட்டிங் யூனிட்டில் இந்த சிறப்பான அணுகுமுறைக்கு ஒரு பாறை போல ஜோ ரூட் இருந்து வருகிறார். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நல்ல முன்னிலைக்கு வரும் வரை ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்கூப் போன்ற அபாயகரமான ஷாட்களை ஜோ ரூட் ஆடவில்லை.

இதையும் படிங்க : என் கூட வேலை செய்யப் போற பேட்டிங் பவுலிங் கோச்.. இவங்களாதான் இருப்பாங்க – கம்பீர் சூசக தகவல்

இதேபோல இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமானவராக ஹாரி புரூக் இருக்கிறார். அவர் இங்கிலாந்து அணிக்காக சில இன்னிங்ஸ்களில் நான் இருக்கிறேன் என தெரியப்படுத்துகிறார். அதிரடியாக விளையாடும் அதே வேளையில் அவர் போல நல்ல டைமிங் உடன் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களை நான் பார்த்தது கிடையாது. மேலும் அவர் விளையாடும் முறை கெவின் பீட்டர் சாலை கொஞ்சம் ஞாபகப்படுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -