இந்திய அணி தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு ஜிம்பாப்வே நாட்டிற்கு சென்று இருக்கிறது. இந்த இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருக்கிறார். இந்த தொடரில் கடைசி மூன்று போட்டிகளுக்கு இணைந்த ஜெய்ஸ்வால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விஷயம் ஒன்றைக் கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஜெய்ஸ்வால் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அதே சமயத்தில் ஜிம்பாப்வே தொடருக்கு அவரது பெயர் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீசில் இருந்து இந்தியா திரும்ப தாமதமான காரணத்தினால், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் சுப்மன் கில் உடன் ஜெய்ஷ்வால் இணைந்து துவக்க ஆட்டக்காரராக வந்தார். மேலும் முதல் ஓவரில் 14 ரன்கள் எடுத்த அவர் மொத்தம் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்குப் பிறகு இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக அவர் மிக முக்கியமாக பகுதிநேர வந்து வீச்சாளராகவும் செயல்பட இருப்பதாக கூறி இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இடம்பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை இந்திய அணிக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இதுகுறித்து ஜெய்ஸ்வால் பேசும் பொழுது “மீண்டும் திரும்பி வந்து பேட்டிங் செய்வது மிகவும் நன்றாக இருந்தது. நான் அதை ரசித்து செய்தேன். ஆடுகளம் இரட்டை வேகம் கொண்டதாகவும் இருந்தது. நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் நாங்கள் எடுத்திருக்கும் ரன்கள் போதுமானது. நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப்ளை உருவாக்கினோம்.
இப்போது நாங்கள் டி20 உலகச் சாம்பியன். ஒவ்வொரு முறை மைதானத்திற்கு செல்லும் பொழுது இதை நான் பெருமையாக உணர்வேன். மேலும் மும்பையில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டங்கள் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள். பந்துவீச்சில் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். நிச்சயம் நான் பந்து வீசுவேன் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஜிம்பாப்வே 3வது டி20.. கோலியை தாண்டி கில் சாதனை.. தேர்வு குழுவுக்கு புது தலைவலி
இந்த போட்டியில் கேப்டன் கில் ஜெய்ஸ்வாலை பந்துவீச்சுக்கு பயன்படுத்துவாரா என்று பார்க்க வேண்டும். மேலும் அணியில் சிவம் துபே இருக்கிறார். எனவே அவர் பந்து வீசுவதற்கும் அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. கம்பீர் புதிய பயிற்சியாளராக வந்திருக்கும் நிலையில் அவர் பயன்படுத்திக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டு.