ஜிம்பாப்வே 3வது டி20.. கோலியை தாண்டி கில் சாதனை.. தேர்வு குழுவுக்கு புது தலைவலி

0
232
Gill

இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தப் போட்டியில் அரைசதம் அடித்ததின் மூலம் விராட் கோலியை தாண்டி கேப்டனாக சுப்மன் கில் சாதனை படைத்திருக்கிறார்.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே என புதிதாக வந்த மூன்று பேரும் சேர்க்கப்பட்டார்கள். துருவ் ஜுரல், சாய் சுதர்ஷன், ரியான் பராக் நீக்கப்பட்டார்கள். மேலும் முகேஷ் குமார் இடத்தில் கலீல் அகமது இடம்பெற்றார்.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜெய்ப்பால் இருவரும் வந்தார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவரில் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கடந்த போட்டியில் சதம் அடித்த அபிஷேக் ஷர்மா 9 பந்தில் 10 ரன் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் சுப்மன் கில் உடன் ருதுராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 44 பந்துகளில் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கேப்டன் சுப்மன் கில் 49 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து சஞ்சு சாம்சன் அனுப்பப்பட்டார். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 7 பந்தில் 12 ரன், ரிங்கு சிங் ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தார்கள்.இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐசிசி டி20 ரேங்கிங்.. டாப் 10ல் நுழைந்த ருதுராஜ் .. அபிஷேக் சர்மா உயர்வு.. ஹர்திக் பாண்டியா பின்னடைவு

இந்திய டி20 அணிக்கு கேப்டனாகி குறைந்த போட்டிகளில் அரைசதம் அடித்தவர்களாக கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் முதல் போட்டியிலும்,ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா 2 போட்டிகளிலும், விராட் கோலி ஐந்தாவது போட்டியிலும் கேப்டனாக அரைசதம் அடித்தவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையில் கேப்டனாக மூன்றாவது போட்டியில் அரை சதம் அடித்து விராட் கோலியை சுப்மன் கில் தாண்டி இருக்கிறார். மேலும் துவக்க வீரர்கள் இடத்தில் விளையாடும் நான்கு வீரர்களுமே தற்பொழுது சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். இதனால் இந்திய தேர்வுக்குழுவுக்கு நல்லவிதமான தலைவலி உருவாகியிருக்கிறது.