அவங்க 2 பேர் நிறைய சொல்லிக் கொடுத்திருக்காங்க.. இனிமே என் ஆட்டத்தை பாருங்க – ஜெய்ஸ்வால் பேட்டி

0
150
Jaiswal

இந்திய அணி நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக வந்த ஜெய்ஸ்வால் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தப் போட்டிக்குப் பிறகு தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் பற்றி பேசி இருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்ற அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த இளம் வயதிலேயே உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற முடிந்தது. மேலும் தலைசிறந்த வீரர்களுடன் இருந்து கற்றுக் கொள்ள முடிந்தது.

- Advertisement -

மேலும் ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கையான இளம் பேட்ஸ்மேனாக உருவெடுத்து வருகிறார். கடினமான கிரிக்கெட் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தன்னுடைய திறமையை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார். மற்ற இளம் வீரர்களை விட மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்தியாவிற்கு அதிக காலம் விளையாட கூடியவராக தெரிகிறார்.

இந்த நிலையில் நேற்று சிறப்பு பேட்டி அளித்த ஜெய்ஸ்வால் பேசும் பொழுது “கடந்த வருடங்களில் இருந்து என் வாழ்க்கையில் நிறைய நடந்து வருகிறது. இதெல்லாம் ஒரு அனுபவம் இதை நான் ரசித்து வருகிறேன். சில நேரம் உங்களுக்கு எதிரில் இருப்பதை உங்களால் ஏற்றுக் கொள்வதற்கு கடினமாக இருக்கும். ஆனால் நீங்கள் அதில் இருந்து வெளியேறி வந்தாக வேண்டும்.

- Advertisement -

ஆனால் இதெல்லாம் வாழ்க்கையில் நடக்கும் சகஜமான விஷயங்கள். நான் எப்பொழுதும் ஒரு நேரத்தில் ஒரு போட்டியை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.அந்த தருணத்தை மட்டுமே அனுபவிக்கிறேன். மேலும் இந்திய கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பாய் இருவரும் செய்த விஷயங்கள் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பானவை.

இதையும் படிங்க: டெல்லி கேப்பிடல்ஸ் அதிரடி.. தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து பாண்டிங் நீக்கம்.. நீக்கியதற்கான 3 முக்கிய காரணங்கள்

இவர்கள் இருவரிடம் இருந்தும் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். மேலும் இவர்களுடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது என்னுடைய அதிர்ஷ்டம். ஒவ்வொரு போட்டியாக எடுத்து செயல்படுகிறேன், ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய முழுதையும் கொடுக்க முயற்சி செய்கிறேன், நான் என் செயல்பாட்டில் கவனம் செலுத்துகிறேன். நான் மிகவும் இளமையாக இருக்கிறேன். இப்பொழுது தான் என் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறேன் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -