நான் நல்லா விளையாடல ஒத்துக்குறேன்.. அடுத்த 10 டெஸ்ட் பாருங்க.. இதுல வேலை செய்திருக்கேன் – சுப்மன் கில் ஓபன் பேட்டி

0
35
Gill

இந்திய அணிக்கு மூன்று வடிவங்களிலும் எதிர்கால கேப்டனாக சுப்மன் கில் பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தான் விளையாடவில்லை எனவும் ஆனால் அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சீக்கிரத்தில் ஓய்வு பெற இருக்கின்ற காரணத்தினால், இந்திய அணிக்கு நீண்ட காலம் விளையாட கூடிய பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தேடி வருகிறது. தற்பொழுது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இந்த தேடலுக்கு சுப்மன் கில் நம்பிக்கை அளிக்கக் கூடியவராக இருக்கிறார்.

- Advertisement -

நான் சரியாக விளையாடவில்லை

இதுகுறித்து சுப்மன் கில் பேசும்பொழுது “டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் என்னுடைய சொந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் விளையாடவில்லை என்பது உண்மைதான். அடுத்து 10 டெஸ்ட் போட்டிகள் தொடர்ச்சியாக வர இருக்கின்றன. இந்த பத்து டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த பிறகு, நான் என்னுடைய எதிர்பார்ப்புகளுக்கு அல்லது இன்னும் அதை விட சிறப்பாக இருப்பேன் என்று நம்புகிறேன்.

“நான் என்னுடைய பேட்டிங்கில் தற்காப்பு ஆட்டத்தில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கொஞ்சம் அதிகம் வேலை செய்திருக்கிறேன். பந்து திரும்பும் ஆடுகளத்தில் விளையாடும் பொழுது நீங்கள் அதிகம் தற்காப்பில் விளையாடி பழக்கப்படுவீர்கள். இதற்கடுத்து பந்தை அடித்து விளையாடுவீர்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அதிகம் விளையாடியதால், என்னுடைய தற்காப்பு ஆட்டத்தில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டு விட்டதாக உணர்கிறேன்”

- Advertisement -

கேப்டனாக இருக்க முக்கிய விஷயம்

மேலும் தொடர்ந்து பேசிய சுப்மன் கில் “ஒவ்வொரு தொடரிலும் நீங்கள் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். உங்களைப் பற்றியும் உங்கள் விளையாட்டு பற்றியும் தெரிந்து கொள்ள முயல்கிறீர்கள். நீங்கள் கேப்டனாக இருந்தால் மற்ற வீரர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்”

இங்கிலாந்து இதையும் படிங்க : இங்கிலாந்து கிரிக்கெட் இந்தியாவை பார்த்து இதை கத்துக்கணும்.. டிராவிட் விஷயத்தை பாருங்க – மைக்கேல் ஆதர்டன் அறிவுரை

“யாராவது 100% கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அந்த வீரரை தொடர்பு கொண்டு நீங்கள் பேச வேண்டியது இருக்கும். அப்படி என்றால் குறிப்பிட்ட வீரரின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஒரு கேப்டனாக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இதில்உரையாடல்கள் இருக்கும். இது கடினமும் கிடையாது சுலபமும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -