674/6.. இந்திய அணி விட்டதை செய்த தமிழக அணி.. வாஷிங்டன் சுந்தர் ரஞ்சன் பால் அதிரடி.. ரஞ்சி டிராபி 2024

0
556
Sundar

நேற்று துவங்கிய ரஞ்சி டிராபியின் இரண்டாவது சுற்றில் தமிழக அணி டெல்லி அணிக்கு எதிராக 6 விக்கெட் இழப்புக்கு 674 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

நடப்பு ரஞ்சி சீசனில் தமிழக அணி வலிமையான சௌராஷ்ட்ரா அணிக்கு எதிராக முதல் போட்டியில் வெற்றி பெற்ற இருந்தது. இந்த நிலையில் நேற்று தனது இரண்டாவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக களம் இறங்கி வலிமையான நிலைக்கு வந்திருக்கிறது

- Advertisement -

டெல்லி முடிவை தவறாக்கிய தமிழக அணி

நேற்று துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் தமிழக அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. பேட்டிங்கில் களம் இறங்கிய தமிழக அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் நாராயணன் ஜெகதீசன் 101 பந்தில் 65 எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து இன்னொரு துவக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 274 பந்துகளில் 213 ரன்கள் குவித்தார்.

நேற்று இந்திய அணி ஒரே நாளில் 379 ரன்கள் குவித்தது. வாஷிங்டன் சுந்தர் நேற்று ஆட்டம் இழக்காமல் 94 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இந்த நிலையில் இன்று போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் – பிரதோஷ் ரஞ்சன் பால் ஆதிக்கம்

இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய தமிழக அணிக்கு வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். வாஷிங்டன் சுந்தர் 269 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தார். பிரதோஷ் ரஞ்சன் பால் 175 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : பெங்களூர் டெஸ்ட்.. நாளை 5வது நாளில் மழை வாய்ப்பு எவ்வளவு உள்ளது.. இந்திய அணி தோல்வியை தவிர்க்குமா? – முழு தகவல்கள்

இன்று தமிழக அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி இன்று இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 43 ரன்கள் எடுத்திருக்கிறது. ரஞ்சித் தொடரில் லீக் போட்டிகள் நான்கு நாட்கள்கொண்ட போட்டியாக நடைபெறும் என்பதால், டெல்லி அணி தமிழக அணியை தாண்டி ஸ்கோர் செய்யாவிட்டால், தமிழக அணைக்கும் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் புள்ளிகள் கூடுதலாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -