இந்திய கிரிக்கெட்

கைவிட்ட கம்பீர் அகர்கர்.. புஜாரா எடுத்த சோகமான முடிவு.. உருக்கமான அறிக்கை.. இந்திய ரசிகர்கள் பரிதாபம்

இந்திய வீரர் செதெதேஸ்வர் புஜாரா ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்திருக்கிறார். மேலும் தனது ஓய்வு அறிக்கையில் மிகவும் உருக்கமான முறையில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு அவருடைய இடத்திற்கு மிகச் சரியாக இந்திய டெஸ்ட் அணிக்கு புஜாரா கிடைத்தார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பெற்ற வரலாற்று வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமான வீரராக இருந்திருக்கிறார். 100 டெஸ்ட் போட்டி தாண்டி விளையாடிய இந்திய வீரர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

கைவிட்ட கூட்டணிகள்

கடைசியாக இங்கிலாந்து அணி இந்தியா வந்த பொழுது முக்கிய நட்சத்திர வீரர்கள் விளையாடவில்லை. இந்த நேரத்தில் ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் மீண்டும் பூஜாவை இந்திய டெஸ்ட் அணிக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்பொழுது தொடர்ந்து இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதற்கு அடுத்து கம்பீர் வந்த பிறகும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நிச்சயம் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது ஆஸ்திரேலியா வெற்றிகரமான அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள யாரும் முன் வரவில்லை. தற்போது புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியிலும் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே அவர் தற்போது ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

புஜாரா புள்ளி விபரங்கள்

புஜாரா இந்திய அணிக்காக மொத்தம் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில் 43.60 ரன் ஆவரேஜில் 19 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் உடன் 7,195 ரன்கள் ஒட்டுமொத்தமாக எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை ஆப்கான் அணி அறிவிப்பு.. இந்திய அணிக்கு சவால் விடும் மூவ்.. சாம்பியன் ஆகுமா?

புஜாரா தனது ஓய்வு அறிக்கையில் கூறும் பொழுது ராஜ்கோட் எனும் சிறிய நகரத்தில் இருந்து நட்சத்திரங்களை அடையும் இலக்கோடு வந்ததாகவும், தனக்கு இந்திய கிரிக்கெட் இவ்வளவு கொடுக்கும் என்று தெரியாது என்றும், தன்னுடைய இந்த பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், எல்லா விஷயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும் என்ற உண்மையின் அடிப்படையில் தானும் ஓய்வு பெறுவதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by