இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போச்சு.. பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள பெரிய தலைவலி.. காரணம் என்ன?. முழு விபரம்

0
799

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இன்னும் இந்திய அணிக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நம்பிக்கையான வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு சிக்கல்

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தோடு முகமது ஷமி காயம் காரணமாக வெளியேறினார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட அவர் ஒரு வருட காலம் இந்திய அணியில் விளையாடவில்லை. மேலும் ஐபிஎல் தொடரிலும் அவர் குஜராத் அணிக்காக விளையாடி வந்த நிலையில் இந்த ஆண்டும் அவர் ஐபிஎல் தொடரில் பங்கு பெறவில்லை. இந்த சூழ்நிலையில் அவர் இல்லாமலேயே இந்திய அணி பெரும்பாலான டெஸ்ட் தொடர்களை விளையாடியது.

இந்த சூழ்நிலையில் முன்னணி அணியான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட்டுக்கு முன்பாக காயத்தில் இருந்து குணமாகி விரைவில் இந்திய அணியில் இணைவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்தவாறு ரஞ்சி டிராபி மற்றும் சையது முஸ்தாக் அலி டிராபி போன்ற தொடர்களில் பந்து வீச ஆரம்பித்தார். இதனால் அவர் மூன்றாவது போட்டிக்கு முன்பாகவே விரைவில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள தலைவலி

ஆனால் இந்தியா உள்நாட்டு தொடர்களில் விளையாடிய பிறகு ஷமிக்கு குதிகாலின் பக்கவாட்டில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் காயத்தின் தன்மை தீவிரமடையாமல் இருக்க ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விரைவில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மீதம் இருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க:இது மோசமான தோல்விதான்.. ஆனா உலக கோப்பைல இத நிச்சயம் செய்வோம் – தென் ஆப்பிரிக்க கோச் பேட்டி

எனவே தற்போது அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் பணிச்சுமை அதிகமாகி விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை மேற்கொண்டு இருக்கிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் ஷமியும் இந்தத் தொடரில் இருந்து முழுமையாக விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இந்திய அணியில் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் பும்ராவுக்கு சிறிய ஆறுதல் கொடுப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் அவரது விலகல் தற்போது அணிக்கு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.

- Advertisement -