3 போட்டியில தொடர்ந்து தோற்றோம்.. கேப்டனா நான் முக்கியமான அந்த வேலையை செஞ்சேன்.. கப் அடிச்சிட்டோம் – யுவராஜ் சிங் பேட்டி

0
1225
Yuvraj

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்திருக்கும் உலக லெஜன்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் யுவராஜ் சிங் வீரர்களை பாராட்டி பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற யூனுஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அவர்கள் தொடர் முழுக்க சிறப்பாக பேட்டிங் செய்த காரணத்தினால் தன்னம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்தார்கள். ஆனால் இந்தியாவிற்கு எதிராக அவர்களது நம்பிக்கை பலிக்கவில்லை.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு நடு வரிசையில் வந்த சோயப் மாலிக் மட்டுமே 41 ரன்கள் எடுத்தார். கேப்டன் யூனுஸ் கான் மிஸ்பா உல் ஹக் மற்றும் சாகித் அப்ரிடி என முன்னணி பேட்ஸ்மேன் எல்லோரும் ஏமாற்றினார்கள். முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்திய அணியில் எந்த முறை துவக்க ஆட்டக்காரராக அம்பதி ராயுடு அனுப்பப்பட்டார். தனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திய அவர் 30 பந்துகளில் 50 ரன்கள் அடித்து நொறுக்கி தள்ளினார். இதைத்தொடர்ந்து ஆட்டத்தை முடிக்க வேண்டிய பொறுப்பு கொடுக்கப்பட்ட யூசுப் பதான் 17 பந்தில் 30 ரன்கள் எடுத்து சரியாக செய்தார். இந்திய அணி 19 ஓவரில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

- Advertisement -

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் யுவராஜ் சிங் கூறும் பொழுது ” நாங்கள் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோல்வி அடைந்திருந்தாலும் கூட, இதற்கு அடுத்த போட்டிகளில் எங்களுடைய வீரர்கள் சிறந்த கேரக்டர்களை வெளிப்படுத்தினார்கள். எங்களுக்கு முதல் ஓவரிலேயே பந்துவீச்சாளர்கள் சிறப்பானதை கொடுத்தார்கள். இந்த போட்டியில் அம்பதி ராயிடுவின் ஆட்டம் மிகவும் முக்கியமானது.

இதையும் படிங்க : இந்தியா சாம்பியன் மாதிரி விளையாடியது.. ஒரு விஷயத்தை செய்யாம பெரிய விலை கொடுத்துட்டோம் – யூனுஸ் கான் பேட்டி

ஹர்பஜன் சிங் எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதெல்லாம் அணிக்காக முன்னே வந்து சிறப்பாகச் செயல்பட்டார். ஒரு கேப்டன் எப்பொழுதும் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். நான் இதைத்தான் அப்படியே செய்தேன். மேலும் இந்த தொடர்பு முழுக்க ரசிகர்களின் ஆதரவு மிகவும் சிறப்பாக இருந்தது” என்று கூறியிருக்கிறார். இந்திய முன்னாள் வீரர்களுக்கு இது ஒரு பெரிய வெற்றியாக அமைய அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் மைதானத்தில் கொண்டாடினார்கள்.

- Advertisement -