எனக்கு போட்டியே கிடையாது.. இந்திய அணிக்கு ஆட நான் கனவு காணல.. என் பாலிசி இதுதான் – ஆகாஷ் தீப் பேட்டி

0
109
Akash

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் தன்னுடைய விளையாட்டு அணுகுமுறை எவ்வாறானது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பில் முகமது ஷமி அல்லது முகமது சிராஜ் இடத்தை நிரப்பக்கூடிய திறமை இருப்பதை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்திருக்கிறார். தற்பொழுது முகமது ஷமி விளையாடாத நிலையில் இவருக்கு வாய்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -
  • எனக்கு யாரும் போட்டி கிடையாது

ஆகாஷ் தீப் தன்னுடைய விளையாட்டு அணுகுமுறை பற்றி கூறும்பொழுது “நான் என்னை எந்தப் போட்டிக்குள்ளும் வைத்துக் கொள்ளவில்லை. நான் என்னுடைய சிறந்ததை கொண்டு வருவதற்கு மட்டுமே கவனம் செலுத்துகிறேன். நான் எப்படி முன்னேற முடியும் என்று நினைத்தால் மட்டுமே எனக்கு முடிவுகள் பாசிட்டிவாக அமையும். அதுவே நாம் மற்றவர்களை நம்முடைய போட்டியாளர்களாக பார்த்தால் நம்முடைய கவனம் சிதறி விடுகிறது.

நாம் அனைவருமே வித்தியாசமானவர்கள். எனவே நான் யாரைப் போலவும் உருவாக வேண்டும் என்று நினைப்பதே கிடையாது. என்னால் என்ன முடியுமோ நான் அதை செய்து கொண்டே இருக்க விரும்புகிறேன். மற்றவர்கள் அவரவர் வேலையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

- Advertisement -

இந்திய அணி வாய்ப்புக்கு அழுத்தத்தை எடுக்கவில்லை

மேலும் தொடர்ந்து பேசிய ஆகாஷ் தீப் கூறும்பொழுது ” நான் கிளப் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பொழுது பெங்கால் அணிக்கு விளையாடுவதை பற்றி சிந்திக்க கிடையாது. அதேபோல் நான் ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக விளையாடிய பொழுது இந்திய அணிக்கு விளையாடுவது குறித்த அழுத்தத்தை நான் ஏற்றிக்கொண்டதும் இல்லை. ஏனென்றால் இது மனதை சிதறடித்து கூடுதல் அழுத்தத்தை நம் மீது திணித்து விடும்.

இதையும் படிங்க : ஒரே டீமில் கோலி பாபர்.?.. 17 வருடம் கழித்து சிறப்பு தொடருக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்கள்

மேலும் இப்போது இந்திய அணிக்கு தேர்வாகிவிட்டாலும் கூட நான் இந்த பயணத்தில் எதையும் தூரமாக யோசிக்கவில்லை. ஆஸ்திரேலிய தொடருக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. நான் இப்போது எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பில் எப்படி சிறப்பாக செயல்படுவது? என்பது குறித்து தான் யோசிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -