கில்லுக்கு இதுக்காகவே ஸ்பெஷல் நன்றி.. நானும் ரியான் பராக்கும் எப்பவோ பேசினது இப்ப நடந்தது – அபிஷேக் ஷர்மா பேட்டி

0
113
Gill

இந்திய இளம் அணி சுக்மண்கில் தலைமையில் ஜிம்பாவே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்தத் தொடரில் தன்னுடைய இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அபிஷேக் சர்மா தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தத் தொடர் குறித்து வெற்றிக்குப் பிறகு அவர் சில விஷயங்களை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

அபிஷேக் ஷர்மா இந்த தொடரின் முதல் போட்டியின் போது ரன்கள் ஏதும் எடுக்காமல் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஆட்டம் இழந்தார். அவர் அறிமுக போட்டியிலேயே ரன்கள் ஏதும் இல்லாமல் வெளியேறினார். தனிப்பட்ட முறையில் அவருக்கு துவக்கமே மிகவும் சோதனையாக அமைந்தது.

- Advertisement -

இருந்த போதிலும் கூட இரண்டாவது போட்டியில் சிக்ஸர் அடித்து தன் ரன் கணக்கை ஆரம்பித்தார். மேலும் 50வது மற்றும் 100வது ரன்னை எட்டும் பொழுது சிக்ஸர் அடித்தே எட்டினார். அச்சம் இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டி20 கிரிக்கெட்டுக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார்.

மேலும் நான்காவது டி20 போட்டியில் தனது முதல் சர்வதேச விக்கெட்டையும் பந்துவீச்சில் கைப்பற்றினார். இன்றும் ஐந்தாவது போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றினார். கேப்டன் சுப்மன் கில் இவருக்கு தொடர்ந்து பந்து வீச வாய்ப்புகளும் கொடுத்தார். இருவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என்பதும், 14 வயது முதலே ஒன்றாக விளையாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தத் தொடரை வென்ற பிறகு பேசிய அபிஷேக் சர்மா “கடந்த இரண்டு போட்டிகளாக பந்து வீசுவதற்கு எனக்கு மிகவும் நன்றாக இருந்தது. ரியான் பாரா கூடியது போல நாங்கள் முதல் போட்டி தோல்விக்குப் பிறகு அனைவரும் ஒன்றாக எழுந்து வந்தோம். அடுத்த நாள் மற்றும் அடுத்த போட்டி என்று நினைத்தால் பாசிட்டிவாக இருப்பது சுலபம்.ஐபிஎல் தொடரிலும் இது குறித்து நாங்கள் பேசி இருந்தோம். மேலும் இந்திய அணியில் விளையாடுவதற்கான தொப்பி கிடைத்தது பெரிய கனவு நனவான தருணம்.

இதையும் படிங்க : முதல் மேட்ச் தோத்ததுக்கு காரணமே இதுதான்.. அடுத்து இலங்கை அணிக்குதான் சம்பவம் – சுப்மன் கில் பேட்டி

நானும் ரியான் பராக்கும் இப்படியான தருணம் குறித்து நிறைய பேசியிருக்கிறோம். ஆனால் நாங்கள் இருவரும் ஒரே போட்டியில் அறிமுகமாவோம் என்று நினைக்கவே இல்லை. எனது பந்துவீச்சை தொடர்ந்து நம்பியதற்கு கேப்டன் கில் மற்றும் பயிற்சியாளருக்கு சிறப்பு நன்றி. நான் சிறப்பாக பந்து வீசவில்லை. ஆனால் நான் கடுமையாக அதில் உழைத்து வருகிறேன்.அணியின் ஆதரவு கிடைப்பது சிறப்பானது. பாகிஸ்தானுக்கு எதிராக எப்பொழுது விளையாடினாலும் அது சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில் என்னுடைய குரு யுவராஜ் சிங் தலைமையில் இந்திய முன்னாள் வீரர்கள் அணி கோப்பையை பாகிஸ்தானுக்கு எதிராக வென்றதற்கு வாழ்த்துக்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -