ஐபிஎல் 2024

என் கஷ்ட காலத்தில் ஆதரவு அளித்தது விராட் பாய்தான்.. ஆர்சிபியை விட்டு வெளியேறியது கஷ்டமா இருந்துச்சு – சிராஜ் பேட்டி

நாளை மறுதினம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான முகம்மது சிராஜ் பெங்களூர் அணி குறித்தும் விராட் கோலி குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

குஜராத் அணியில் முகமது சிராஜ்

பெங்களூர் அணிக்கும் முகம்மது சிராஜுக்கும் ஒரு நெருங்கி தொடர்பு உண்டு. முதன்முதலாக ஐபிஎல் தொடரில் 2017 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2.60 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதற்குப் பிறகு பெங்களூர் அணி இவரை 2018 ஆம் ஆண்டு 2.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அப்போது வரை தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பெங்களூர் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெங்களூர் அணியில் இவருக்கு விராட் கோலி நல்ல ஆதரவை வழங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஏலத்தில் குஜராத் அணிக்கு வரை 12.25 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் முகமது சிராஜ் பெங்களூர் அணி மீதான பாசம் குறித்தும், விராட் கோலி குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். பெங்களூர் அணியில் இருந்து வெளியே வந்த போது தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும், ஆனால் குஜராத் அணி தற்போது நல்ல அணியாக இருக்கிறது என்றும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் பாய் ஆதரவை அளித்தார்

இதுகுறித்து முகமது சிராஜ் கூறும் போது ” புதிய சீசனுக்கு முன்னதாக குஜராத் அணியில் இணைவது ஒரு நல்ல உணர்வாகும். ஆமாம் கடினமான காலங்களில் எனக்கு விராட் பாய் நல்ல ஆதரவை வழங்கியிருக்கிறார். அதனால் ஆர்சிபி அணியை விட்டு வெளியேறிய போது அந்த உணர்வு மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக இருந்தது. ஆனால் குஜராத் அணியில் கில்லின் கீழ் தற்போது எங்களுக்கு ஒரு அருமையான அணி இருக்கிறது.

இதையும் படிங்க:நைட் பார்ட்டிக்கு போங்க.. என் கவனத்தை திசை திருப்ப.. ஹெட் வேணும்னே இப்படி பண்ணாரு – நித்திஷ் ரெட்டி பேட்டி

மேலும் பந்துவீச்சாளர்கள் உமிழ் நீரை பயன்படுத்தலாம் என்கிற நல்ல செய்தி பவுலர்களுக்கு பெரிய நன்மையை அளிக்கும். ஏனென்றால் பந்தின் மீது உமிழ்நீரை பயன்படுத்தும் போது தான் அதில் ரிவர்ஸ் ஸ்விங்கை கண்டறிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஏனென்றால் ஸ்விங்கைப் பெறுவதற்கு பந்தை சட்டையில் தேய்ப்பது உதவாது. ஆனால் பந்தில் உமிழ்நிரை பயன்படுத்தும் போது அந்த ஸ்விங் பெற எளிதாக இருக்கும. மேலும் இந்த விஷயம் முக்கியமானது” என்று முகமது சிராஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts