இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஜோ ரூட்டின் சாதனை ஒன்றை உடைப்பதற்கு இந்திய வீரர் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது.
இந்திய அணி தற்பொழுது 40 நாளுக்கும் மேற்பட்ட நீண்ட ஓய்வில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி துலீப் டிராபி துவங்குகிறது. இதில் இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா பும்ரா மற்றும் முகமது சமி, அஸ்வின் தவிர மற்ற எல்லா வீரர்களுமே விளையாடுகிறார்கள்.
கில்லா ஜெயஸ்வாலா?
இந்திய கிரிக்கெட் ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்கள் அணியில் இருந்து ஒரு பேட்ஸ்மேன் சூப்பர் ஸ்டார் வீரராக முன் நிறுத்தும். அவர் விளையாடும் காலம் வரையில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருப்பார். கவாஸ்கர், சச்சின், விராட் கோலி என இந்த பாரம்பரியம் பெரியது. இந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் சுப்மன் கில்லை இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் வீரராக முன்னிறுத்த முயற்சிகள் செய்து வருகிறது.
அதே சமயத்தில் கில்லை விட பெரிய அளவில் ரன்கள் குவிக்க கூடிய வீரராக ஜெய்ஸ்வால் இருக்கிறார். அவரிடம் நல்ல மனக்கட்டுப்பாடு இருக்கிறது. அதை பயன்படுத்தி மிகவும் அமைதியாகவும் விளையாட செய்கிறார். அதே சமயத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவதற்கு எல்லா ஷாட்களும் அவரிடம் இருக்கிறது. அவர் பேட்டிங் செய்யும் வேகத்தை மாற்றுகையில் அதிரடியாக 50 ரன்கள் குவித்து விடுகிறார். இதனால் அவரை கட்டுப்படுத்துவது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் ஜெயஸ்வாலாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.
ஜோ ரூட் சாதனை முறியடிக்க வாய்ப்பு
தற்போது 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிக ரன் அடித்தவராக ஜெய்ஸ்வால் இருந்து வந்தார். இப்படியான நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் சிறப்பாக ரன்கள் குவித்து ஜெய்ஸ்வாலை வந்துவிட்டார்.
இதையும் படிங்க : ஆஸி ஓவரா பேசுறதுக்கு.. இங்க ஏன் யாரும் பதில் சொல்லல.. அஸ்வின் அதை ஆரம்பிங்க – கவாஸ்கர் பேச்சு
ஜெய்ஸ்வால் 9 போட்டிகளில் 1028 ரன்கள் எடுத்திருக்கிறார். ஜோ ரூட் 15 போட்டிகளில் 1373 ரன்கள் எடுத்திருக்கிறார். தற்போதைக்கு 345 ரன்கள் ஜோ ரூட் முன்னணியில் இருக்கிறார். மேலும் அவருக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி இன்னும் மிச்சம் இருக்கிறது. அந்த ஒரு டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சரியாக விளையாடவில்லை என்றால் ஜெய்ஸ்வால் பங்களாதேஷ் தொடரில் ஜோ ரூட் சாதனையை முறியடிக்க முடியும். இல்லையென்றால் அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முறியடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.