இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் அதிரடியாக விளையாடிய இந்தியா மாஸ்டர்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக்
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி இந்தியா மாஸ்டர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராயுடு மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில் விக்கெட் கீப்பர் ராயுடு ஐந்து ரன்னில் எதிர்பாராத விதமாக வெளியேற, சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடினார். இதற்கு இடையில் பவான் நெகி 14 ரன்னில் வெளியேற யுவராஜ் சிங் சச்சின் உடன் ஜோடி சேர்ந்தார்.
சச்சின் டெண்டுல்கர் 30 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 42 ரன்கள் குவிக்க, மறுமுனையில் யுவராஜ் சிங் விண்டேஜ் அதிரடி ஆட்டத்தை காட்டினார். 30 பந்துகளை எதிர்கொண்ட யுவராஜ் சிங் 1 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 196 ஸ்ட்ரைக் ரேட்டில் 59 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடினார். அவருக்குப் பிறகு ஸ்டூவர்ட் பின்னி 36 ரன், யூசுப் பதான் 23 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது.
இந்திய அணி பைனலுக்கு தகுதி
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் வாட்சன் 5 ரன்னில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார். பின் மற்றொரு தொடக்க வீரர் ஷான் மார்ஸ் 21 ரன்னில் வெளியேற, அதற்குப் பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு வரிசையாக விக்கட்டுகள் விழ ஆரம்பித்தது. மிடில் வரிசை பேட்ஸ்மேன் பென் கட்டிங் மட்டும் 30 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 39 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:213 ரன்.. மாஸ் காட்டிய எம்ஐ மகளிர்.. கேப்டன் சூறாவளி ஆட்டம்.. 47 ரன்களில் குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி
அதற்குப் பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்தது. பந்துவீச்சை பொறுத்தவரை சபாஷ் நதீம் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் இர்பான் பதான் 2 விக்கெட்டுகள் மற்றும் வினய்குமார் 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இதனால் இந்திய அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இறுதிப் போட்டிக்கு முன்னேறி 20 குறிப்பிடத்தக்கது.