நான் உலககோப்பையை கொண்டாடியதை.. என் பசங்களுக்கு காட்ட மாட்டேன்.. காரணம் இதான் – ராகுல் டிராவிட் பேட்டி

0
73
Dravid

இந்திய அணி இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியது. அப்போது அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தன்னுடைய மகன்களுக்கு காட்ட மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.

ராகுல் டிராவிட் அவர்களுக்கு சமித் டிராவிட், அன்வை டிராவிட் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூத்தவர் தற்பொழுது இந்திய அண்டர் 19 அணிக்கு தேர்வாகி இருக்கிறார். ராகுல் டிராவிட் தன்னுடைய மகன்களை கிரிக்கெட்டில் தன்னைப் போலவே ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டிராவிட்டின் இன்னொரு முகம்

ராகுல் டிராவிட் பற்றி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் ஒருமுறை கூறும் பொழுது “நீங்கள் உண்மையான அக்ரஷனை பார்க்க வேண்டும் என்றால் ஒருமுறை ராகுல் டிராவிட்டின் கண்களை பாருங்கள்” என்று கூறியிருப்பார். ராகுல் டிராவிட் அந்த அளவிற்கு ஆட்டத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டு உழைக்கக் கூடியவர்.

அதே சமயத்தில் அவருடைய நடவடிக்கைகள் பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். ஆனால் அவர் உள்ளுக்குள் மிகவும் ஆக்ரோஷமானவர். டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி கோப்பையை எடுத்துச் சென்று ராகுல் டிராவிட் வசம் கொடுத்தார், அதைப் பெற்றுக் கொண்டு ராகுல் டிராவிட் கொண்டாடிய விதம் ஆச்சரியமாக இருந்தது. அவர் அவ்வளவு ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

- Advertisement -

மகன்களுக்கு காட்ட மாட்டேன்

தற்போது இது குறித்து பேசி இருக்கும் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “நாங்கள் ஒன்றாக சேர்ந்து ஏதாவது ஒன்றை சாதிப்பதற்கு பாடுபட்டோம். அப்படி ஏதாவது சாதிக்கும் பொழுது, அப்படியான வெற்றி கொண்டாட்ட தருணங்கள் உங்களுக்கு அமையும். கொண்டாட்டங்கள் எப்பொழுதுமே நல்லதுதான். ஆனாலும் நான் கொண்டாடியதை என் மகன்களுக்கு காட்டக்கூடாது என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு பைத்தியம் பிடித்தது போல இருந்தது.

அதே சமயத்தில் என் மகன்களிடம் நான் எப்பொழுதும் சமநிலையை பராமரிக்க வேண்டும் என்று கூறி வந்திருக்கிறேன். இப்பொழுது அவர்கள் இதையெல்லாம் பார்த்தார்கள் என்றால் ‘ நீங்கள் எங்களுக்கு ஒன்றை சொல்லித் தருகிறீர்கள் ஆனால் உங்களுக்கு வரும் பொழுது வேறு ஒன்றை செய்கிறீர்கள்’ என்று கேள்வி கேட்பார்கள். எனவே நான் என் மகன்களுக்கு என்னுடைய உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தை காட்ட மாட்டேன்.

இதையும் படிங்க : விராட் கோலி வேற்று கிரகவாசி.. அவர்கிட்ட இதை மட்டும் செய்யவே கூடாது – இந்திய முன்னாள் பீல்டிங் கோச் பேட்டி

என் மனைவிக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. நான் வீட்டிலிருந்து என்னுடைய மகன்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்கு ஏதாவது பரிந்துரைகள் இருந்தால் நான் என்னுடைய ஈமெயில் ஐடியை கொடுக்கிறேன் நீங்களும் கூறுங்கள்” என்று நகைச்சுவையாககூறி முடித்திருக்கிறார்.

- Advertisement -