இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு குறிப்பிட்ட வீரர்களுடன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பேட்டிங் செய்ய விரும்புவதாக கூறியிருக்கிறார்.
தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜோ ரூட் டன் கணக்கில் தொடர்ந்து ரன்கள் அடித்து வருகிறார். இதன் காரணமாக திடீரென சிறந்த பேட்ஸ்மேன் இங்கிலாந்தின் ஜோ ரூட் இல்லை இந்தியாவின் விராட் கோலி என்ற விவாதங்கள் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது.
எண்கள் வேறு இதயம் வேறு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது எண்களின் அடிப்படையில் பார்த்தால் விராட் கோலியை விட ரூட் மிகப்பெரிய முன்னணியில் இருக்கிறார். கடந்த நான்கைந்து வருடங்களில் மட்டும் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 17 சதங்கள் அடித்து இருக்கிறார். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் ரன்கள் அடித்துள்ள சச்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் இருக்கும் ஒரே வீரராகவும் இருக்கிறார்.
இன்னொரு பக்கத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டையும் எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் சீராக ரன்கள் எடுக்கக்கூடிய ஒரே ஒரு பேட்ஸ்மேனாக தற்போதைய கிரிக்கெட் உலகில் இந்தியாவின் விராட் கோலி மட்டுமே இருக்கிறார். இந்த வகையில் இந்த இருவரில் விராட் கோலியை தான் தேர்ந்தெடுப்பதாகவும், அவருடன் தன் வாழ்நாள் முழுவதும் பேட்டிங் செய்ய விரும்புவதாகவும், எண்கள் சொல்வது வேறு இதயம் சொல்வது வேறு என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன்
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “எண்களை வைத்து பார்க்கும் பொழுது உங்களுக்கு ஜோ ரூட் சிறந்தவர் என்று கூறும்.ஆனால் என்னுடைய இதயம் விராட் கோலியை விரும்புகிறது. கடந்த ஒரு பிரசாதம் காலமாக நான் அவரை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.
இதையும் படிங்க : என்னால எல்லா நாளும் அரைசதம் அடிக்க முடியும்.. இன்டெண்ட் காட்டினதே அதுக்குதான் – ரோகித் கம்பீருக்கு ஸ்ரேயாஸ் ஸ்ட்ராங் மெசேஜ்
ஒரு பெரிய போட்டி மற்றும் ஒரு பெரிய தொடருக்கு அவர் எவ்வளவு ஆர்வமாகவும் ஈடுபாட்டோடும் அர்ப்பணிப்போடும் தயாராகிறார் என்று எனக்குத் தெரியும். நீங்கள் அவரது திறமை குறித்து எதிராக பேசிவிட்டால், அவர் உங்களுக்கு எதிராக கடுமையாக திரும்பி வருவார். பிறகு நீங்கள் ஏன் அவரிடம் அப்படி பேசினோம் என்று வருத்தப்படும் அளவுக்கு நிலைமை ஆகிவிடும். என் வாழ்நாள் முழுவதும் நான் ஒருவருடன் பேட்டிங் செய்ய விரும்புவேன் என்றால் அது விராட் கோலிதான்” என்று கூறியிருக்கிறார்.