இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் பீல்டிங் மிக மோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இனி பீல்டிங் செய்வதற்கான மெடல் கொடுக்கக் கூடாது என விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இதுவரையில் மொத்தம் ஐந்து கேட்ச்களை பிடிக்காமல் தவற விட்டு இருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி எதிர் பார்த்ததை விட அதிக ஸ்கோருக்கு செல்லும் வாய்ப்பில் இருக்கிறது.
நோகடிக்கப்படும் பும்ரா
இந்த போட்டியில் சதம் அடித்த ஒல்லி போப், அரை சதம் அடித்த பென் டக்கெட், 99 ரன் எடுத்த ஹாரி புரூக் என ரன்கள் குவித்த அனைவருமே பும்ரா பந்துவீச்சில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா இருவருமே தவற விட்டார்கள். இதன் காரணமாக இங்கிலாந்து ஸ்கோர் எகிறிக் கொண்டிருக்கிறது.
மேலும் இங்கிலாந்து தொடர்ந்து ஸ்கோர் செய்கின்ற காரணத்தினால் ஒவ்வொரு நேரத்திலும் வந்து வீச்சுக்கு தொடர்ந்து வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். தன்னுடைய காய அபாயத்தையும் தாண்டி அணிக்காக அவர் தொடர்ந்து பந்து வீசினாலும், அவர் உருவாக்கும் வாய்ப்புகளை எடுக்க இந்திய வீரர்கள் தொடர்ந்து கோட்டை விட்டு வருகிறார்கள்.
கோபமடைந்த பும்ரா
இந்த நிலையில் இறுதியாக அதிரடியாக விளையாடிய ஹாரி புரூக்குக்கு பும்ரா பந்துவீச்சில் கேட்ச் வாய்ப்பை உருவாக்கினார். எளிதான இந்த வாய்ப்பை மீண்டும் ஜெய்ஸ்வால் தவறவிட்டார். இந்த நிலையில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத பும்ரா மூச்சை பலமுறை இழுத்து விட்டு எதுவும் சொல்லாமல் திரும்பி சென்று விட்டார்.
இதையும் படிங்க : கோலி இல்லாமல் தடுமாறும் சிராஜ்.. தொடர்ந்து சொதப்பல்.. உண்மையை சொல்லும் புள்ளி விவரம்
இது குறித்து விமர்சனம் செய்துள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” இந்திய வீரர்கள் தொடர்ந்து எளிய வாய்ப்புகளை வீணடித்து வருகிறார்கள். இந்த முறை அவர்களுக்கு ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறந்த பீல்டருக்கான அவார்டு எதுவுமே கொடுக்கப்படக்கூடாது” என்று கோபமாக கூறியிருக்கிறார்.






