தற்போது பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த நிலையில் அங்கு தங்கியிருக்கும் பங்களாதேஷ் அணியின் வீரர்கள் வினோதமான புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார்கள்.
பங்களாதேஷ் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவல்பிண்டி மைதானத்தில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சி நேஷனல் மைதானத்தில் தொடங்குகிறது.
பங்களாதேஷ அணி ஆகஸ்ட் 12ஆம் தேதி பாகிஸ்தான் வந்தடைந்தது. மேலும் 16ஆம் தேதி வரை கராச்சியில் இருந்து போட்டிக்கான பயிற்சிகளை பெறுகிறது. இதற்கு அடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக 17 ஆம் தேதி இஸ்லாமாபாத் புறப்பட்டு செல்கிறது.
தற்போது பங்களாதேஷில் உள்நாட்டு பிரச்சினை மிகத் தீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான அணிகள் டெஸ்ட் தொடர் நடைபெறுமா? என்கின்ற பெரிய சந்தேகம் நிலவியது.இப்படியான நிலைமையில் நாட்டை விட்டு பங்களாதேஷ் வீரர்கள் பாகிஸ்தானில் இருப்பது அவர்களுக்கு கொஞ்சம் ஆசுவாசமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பங்களாதேஷ் வீரர்கள் தங்கி இருக்கும் காட்சி ஹோட்டலில் அவர்களுக்கு இன்டர்நெட் வேகம் மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பங்களாதேஷ் வீரர்கள் தங்களுக்கு சரியான இன்டர்நெட் வேகம் கிடைப்பதில்லை என புகார் செய்திருக்கிறார்கள். இது தற்போது பாகிஸ்தான் வட்டத்தில் பரபரப்பான செய்தியாக பேசப்படுகிறது.
இதையும் படிங்க : நான் டி20 அணியில் இருந்தால்.. அனைவரது புருவமும் உயர்ந்திருக்கும்.. அதனால் இத பண்ண போறேன் – பவுமா பேட்டி
ஒரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யும்பொழுது சில அணிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படும். ஹோட்டலில் உணவு அல்லது பயிற்சி வசதிகளில் ஏதாவது குறைபாடுகள் இருக்கும். இதுகுறித்து அணிகள் அதிருப்தி தெரிவிப்பது வழக்கம். ஆனால் எப்போதும் கேள்விப்பட்டிராத வகையில் இன்டர்நெட் வேகம் குறைவாக இருப்பதாக பங்களாதேஷ் வீரர்கள் வினோதமான புகாரை கூறியிருக்கிறார்கள்.






