இது யாருக்கும் நடக்கும்.. ஆனா நீ பவுலர் மறந்துடாத.. ரோகித் பையா மாதிரி பார்த்ததே இல்ல – ஆகாஷ் தீப் பேட்டி

0
170
Rohit

இந்திய டெஸ்ட் அணியில் புதிதாக இணைந்திருக்கும் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் கேப்டனாக ரோஹித் சர்மா எப்படி ஆனவர் என்பது குறித்து மிகவும் நெகிழ்வான விஷயங்களை கூறியிருக்கிறார்.

பெங்கால் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும்வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

வித்தியாசமான முதல் விக்கெட்

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தியா வந்திருந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் ஐந்தாவது போட்டியில் ஆகாஷ் தீப் அறிமுகமானார். இந்த போட்டியில் அவருடைய முதல் விக்கெட்டாக ஜாக் கிரவுலி கிளீன் போல்ட் மூலம் வீழ்ந்தார். ஆனால் கொண்டாட்டம் முடிவதற்குள் அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது.

இப்படியான நிலையில் மனம் தளராத ஆகாஷ் தீப் மீண்டும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டை கைப்பற்றினார். இப்படி அவருடைய ஆரம்பமே மிகப்பெரிய போராட்டமாகவே இருந்தது. இப்படியான நிலைகளில் கேப்டனாக ரோகித் சர்மா தன்னிடம் எவ்வளவு அருமையாக நடந்து கொண்டார் என்பது குறித்து ஆகாஷ் தீப் தற்பொழுது கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மாவை போல் பார்த்ததில்லை

இதுகுறித்து ஆகாஷ் தீப் கூறும் பொழுது “ரோகித் பையாவின் தலைமையின் கீழ் விளையாடுவது பெரிய அதிர்ஷ்டம் என்று நான் எப்பொழுதும் கூறுவேன். அவருடைய தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம். அவர் மிகவும் வித்தியாசமான ஒரு கேப்டன். நான் விளையாடியதில் அவரே மிகச் சிறந்த கேப்டன்”

“ரோகித் பையா மிகவும் கூலான இயல்பான ஒரு மனிதராக கேப்டனாக களத்தில் இருப்பார். அவர் எனக்கு மட்டும் கிடையாது ஒவ்வொரு வீரருக்கும் எளிமையான விஷயங்களை வைத்திருப்பார். எல்லா அந்தஸ்துள்ள வீரர்களையும் அவர் சமமாக ஒரே மாதிரி நடத்துவார். மேலும் கேப்டன் போல இல்லாமல் ஒரு இளைஞன் போல நண்பனாக சகோதரன் போல இருப்பார்”

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டின் இளவரசன் கில்லா?.. அதெல்லாம் வியாபாரத்துக்கு சொல்றது.. உண்மை இதான் – அஸ்வின் பேட்டி

“என்னுடைய முதல் சர்வதேச விக்கெட் நோ-பால் ஆக அமைந்தது. அந்த சம்பவத்தின் போது ரோகித் பையா என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார்.அதே சமயத்தில் என்னிடம் இது போன்ற விஷயங்கள் யாருக்கும் நடக்கவே செய்யும், ஆனால் நீங்கள் நோபால் போன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஒரு பவுலராக இப்படியான விஷயங்களை மறந்து விடக்கூடாது என்று கூறியிருந்தார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -