இந்த ஆண்டு இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடர் ரஞ்சி டிராபி சீசன் நேற்று ஆரம்பித்தது. இதில் சௌராஷ்டிரா மற்றும் தமிழக அணிகள் மோதிய போட்டியில் தமிழக அணி தற்போது முன்னணியில் இருக்கிறது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற சௌராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெயதேவ் உனட்கட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த அணியில் இந்திய டெஸ்ட் அணியின் வீரர் புஜாரா இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமாற்றம் அளித்த புஜாரா
முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஹர்விக் தேசாய் ரன் ஏதும் எடுக்காமலும், சிராக் ஜனி 53 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா அவருடைய பாணியில் பொறுமையாக விளையாடிய 41 பந்துகளில் 16 ரன் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஒரு முனையில் இறுதிவரை நின்று ஆட்டமெலக்காமல் விளையாடிய அர்பித் வாஸ்தவா 149 பந்துகள் சந்தித்து 62 ரன்கள் எடுத்தார். இறுதியாக சௌராஷ்ட்ரா அணி 203 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. தமிழக அணியின் தரப்பில் சோனு யாதவ், முகமத் முகமத், சாய் கிஷோர் மூவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
முதல் விக்கெட் கலக்கல்
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய தமிழக அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விக்கெட் கீப்பர் நாராயணன் ஜெகதீசன் இருவரும் அற்புதமான துவக்கத்தை கொடுத்து அசத்தினார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியை முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இந்த ஜோடியில் சாய் சுதர்சன் 159 பந்துகளில் 82 ரன்கள், நாராயணன் ஜெகதீசன் 165 பந்துகளில் சதம் அடித்து சரியாக 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் பாபா இந்திரஜித் 80 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். தற்போது பிரதோஷ் ரஞ்சன் பால் 129 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க:
இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து சௌராஷ்ட்ரா அணியை விட முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்று இருக்கிறது. மேலும் ரஞ்சி தொடரில் லீக் போட்டிகள் நான்கு நாட்கள் கொண்ட போட்டியாகவே நடத்தப்படும். போட்டி டிரா ஆனால் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தமிழக அணைக்கு கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். மீதம் 7 விக்கெட் கைவசம் இருப்பதாலும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்று இருப்பதாலும் இந்திய அணிக்கு இந்த போட்டி சிறப்பாக அமைந்திருக்கிறது!