ஐபிஎல் மற்றும் ஐசிஎல் தொடர் இரண்டிலும் பங்குபெற்று விளையாடிய 5 இந்திய வீரர்கள்

0
1435
Hemang Badani ICL and IPL

எல்லோருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் பற்றி நன்றாக தெரியும். 2008ஆம் ஆண்டு முதல் இன்று வரை மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் உலகின் தலைசிறந்த டி20 தொடர் என்று கூட நாம் மார்தட்டி சொல்லலாம். சுமார் 13 ஆண்டுகளுக்கு மேல் அந்த தொடர் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்னர் பிசிசிஐ அனுமதி இல்லாமல் இந்தியன் கிரிக்கெட் லீக் எனப்படும் ஐசிஎல் என்கிற தொடர் விளையாடப்பட்டது. இதைக்கண்ட பிசிசிஐ பெரும் கோபம் கொண்டு அந்த தொடரில் விளையாடிய வீரர்களை ஐபிஎல் தொடரிலும் இந்திய அணி களும் விளையாட தடை விதித்தது. ஆனாலும் அதன் பின்னர் அவர்கள் மேல் கருணை காட்டி மீண்டும் அவர்களை விளையாட வைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது ஐசிஎல் மற்றும் ஐபிஎல் ஆகிய இரண்டு தொடரிலும் விளையாடிய இந்திய வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

1. அம்பத்தி ராயுடு

பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் இவர் மிக சிறப்பாக விளையாடுவார். மேலும் உள்ளூர் தொடர்களில் மிக சிறப்பாக விளையாடிய இவரை இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் ஹைதராபாத் ஹீரோஸ் மணி வரை விளையாட வைத்தது. அதன் பின்னர் ஐபிஎல் தொடர் முறையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட ஆரம்பித்து தற்பொழுது இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய இவரது திறமையை கண்ட இந்திய அணி சில ஆண்டுகள் இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை வழங்கியது. இருப்பினும் இவரால் தொடர்ச்சியாக இந்திய அணியில் நீடிக்க முடியவில்லை. தற்பொழுது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு சென்னை அணிக்காக மட்டும் விளையாடுகிறார்.

- Advertisement -

2. ஸ்டூவர்ட் பின்னி

அம்பத்தி ராயுடு போலவே இவரும் இந்தியன் கிரிக்கெட் லீக்கில் ஹைதராபாத் ஹீரோஸ் அணிக்காக விளையாட தொடங்கினார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக இவர் தனது ஐபிஎல் பயணத்தை ஆரம்பித்தார். மும்பையிலிருந்து ராஜஸ்தான் அணிக்காக பல தொடர்களில் விளையாடிய இவரை, பிசிசிஐ இந்திய அணியிலும் விளையாட வைத்தது.

ஆரம்பத்தில் மிக சிறப்பாக விளையாட தொடங்கினாலும் அதன் பின்னர் இவர் தொடர்ச்சியாக நன்றாக விளையாடாத காரணத்தினால் இந்திய அணியில் தொடர்ந்து இவரால் விளையாட முடியாமல் போனது. அதுபோலவே ஐபிஎல் தொடரிலும் இவர் சரியாக விளையாடாத காரணத்தினால் அணி நிர்வாகம் இவருக்கு விளையாடும் வாய்ப்பை வழங்க மறுத்தது. தற்பொழுது எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் வாய்ப்புக்காக காத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஸ்ரீதரன் ஸ்ரீராம்

இந்திய அணிக்காக 2000ம் ஆண்டு தனது முதல் போட்டியில் விளையாடத் தொடங்கினார். இடது கை பேட்ஸ்மேனான இவர் ஆரம்பத்தில் சற்று அற்புதமாக விளையாட தொடங்கினாலும் அதன் பின்னர் தொடர்ச்சியாக தனது திறமையை காண்பிக்க தவறினார். மேலும் உள்ளூர் ஆட்டங்களில் இவர் தொடர்ந்து சொதப்பி வர படிப்படியாக இவருக்காண வாய்ப்பு தள்ளிப்போனது.

இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் ஆரம்பத்தில் இவர் விளையாடினார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிக்காக இவர் சில போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. ரோகன் கவஸ்கர்

இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் உடைய சொந்த சொந்த மகனான இவர் சில காலம் வெஸ்ட் பெங்கால் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.

இந்திய அணிக்காக இவர் ஒரு சில போட்டிகளில் விளையாடி இருந்தாலும் ரஞ்சி டிராபி தொடரில் வெஸ்ட் பெங்கள் அணைக்காக இவர் பல போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியன் கிரிக்கெட் லீக்கில் கொல்கத்தா அணிக்காக இவர் விளையாடினார். அதன் பின்னர் ஐபிஎல் தொடர் ஆரம்பித்தவுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இவர் விளையாடினார். அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு இவர் தனது ஓய்வை அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஹேமங் பதானி

இந்திய அணிக்காக சுமார் 40 போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார். மொத்தமாக 867 ரன்களை இவர் குவித்து இருக்கிறார்.அவரது பேட்டிங் அவரேஜ் 33.34 ஆகும். எனினும் இவரை விட சிறந்த வீரர்கள் அடுத்தடுத்து வருகையில் இவர்களை வாய்ப்பு படிப்படியாக குறைந்து போனது.

இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் முதலில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக இவர் விளையாடத் தொடங்கினார். அதன் பின்னர் ஐபிஎல் தொடர் முறையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதே சென்னை அணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.