இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு முறியடிப்பதற்கு ஒரு மகத்தான சாதனை காத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது ஓய்வில் இருந்து வரும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக செப்டம்பர் மாத இறுதியில் இருந்து முக்கிய டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு நீண்ட ஓய்வில் இந்திய அணி தற்போது இருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தோடு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததோடு 712 ரன்கள் குவித்து மிகப்பெரிய சாதனை படைத்தார். இதன் மூலமாக இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்தார்.
இது இந்திய அணியில் இவருக்கு ஒரு நிலையான இடத்தை கொடுக்க இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் உதவிகரமாக அமைந்தது. மேலும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும், அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. இதில் நிச்சயம் இந்திய அணிக்கு விளையாட காத்திருக்கும் ஜெய்ஸ்வால் ஒரு மிகப்பெரிய சாதனையை உடைக்க தயாராக இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூலமாக 26 சிக்சர்களை அடித்திருக்கும் ஜெய்ஸ்வால் இன்னும் 8 சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரு காலாண்டர் ஆண்டில் டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படைக்க காத்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியை சேர்ந்த பிரண்டன் மெக்கலம் 33 சிக்ஸர்களை அடித்ததே இதுவரை அதிகபட்ச சாதனையாக இருக்கிறது.
தற்போது ஜெய்ஸ்வால் அதை முறியடிக்கும் பட்சத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். அது விரைவில் நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனை பட்டியலில் 33 சிக்சர்களை அடித்ததோடு மெக்கலம் முதலிடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க:181 ரன்.. ஸ்டார் பேட்ஸ்மேன்ஸ் தடுமாறின பிட்ச்ல.. நான் ஆட்டநாயகனாக காரணம் இவர்தான் – முஷிர் கான் நெகிழ்ச்சி
இதற்கு அடுத்ததாக ஜெய்ஸ்வால் 26 சிக்ஸர்களை அடித்தது இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 2022ஆம் ஆண்டு 26 சிக்ஸர்களை அடித்திருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் ஆடம் கில்கிறிஸ்ட் 22 சிக்ஸர்களை 2005 ஆம் ஆண்டு அடித்திருக்கிறார். அவருக்கு அடுத்ததாக 2008ஆம் ஆண்டு இந்தியாவின் தி கிரேட் வீரேந்திர சேவாக் 22 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.