கோலி ரோகித்லாம் ஓரம் போங்க.. 2023ல் அதிக ஊதியம் பெற்ற இந்திய வீரர் யார்?.. டாப்பில் வந்த ஸ்பின்னர்

0
927

சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற நாடுகளை விடவும் இந்திய அணி வீரர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. பிசிசிஐ செண்ட்ரல் ஒப்பந்தம், ஒவ்வொரு போட்டிக்குமான ஊதியம் என்று இந்திய அணி வீரர்கள் கோடிகளில் வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் பிசிசிஐ தரப்பில் ஒரு டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும் அளிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நடப்பாண்டில் இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அதிகளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தது. மொத்தமாக இரு நாடுகளுக்கு இடையிலான 7 ஒருநாள் தொடர்களில் இந்திய அணி 6 தொடரை கைப்பற்றியது. அதில் உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் இந்திய அணி வென்று அசத்தியது.

- Advertisement -

நடப்பாண்டை பொறுத்தவரை இந்திய அணி மொத்தமாக 35 போட்டிகளில் விளையாடி 27 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. அதில் ஒரேயொரு போட்டி மட்டும் மழையால் முடிவு எட்டப்படவில்லை. இந்த வெற்றி வெறும் அணிக்கு மட்டுமல்லாமல் வீரர்களுக்கு ஊதியமாகவும் மாறியுள்ளது. இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராக போட்ட உழைப்பிற்கான ஊதியம் சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நடப்பாண்டில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்திய அணியின் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் ரூ.1.80 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். இவர் மொத்தமாக 30 போட்டிகளில் விளையாடியுள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் வீழ்த்தி இருக்கிறார்.

இவருக்கு பின் 2வது இடத்தில் சுப்மன் கில் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,584 ரன்களை குவித்துள்ளார்.அதேபோல் ஒரு போட்டிக்கு ரூ.6 லட்சம் வீதம் ரூ.1.74 கோடி வருமாமமாக பெற்றுள்ளார் சுப்மன் கில். இவர்களுக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தலா 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ரூ.1.62 கோடி ஊதியமாக பெற்றுள்ளனர்.

- Advertisement -

4வது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 26 போட்டிகளில் விளையாடி ரூ.1.56 கோடி ஊதியம் பெற்றுள்ளார். அதேபோல் 5வது இடத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 25 போட்டிகளில் விளையாடி ரூ.1.50 கோடி ஊதியமாக பெற்றுள்ளார்.

அதேபோல் சூர்யகுமார் யாதவ் 21 போட்டிகளில் விளையாடி ரூ.1.26 கோடியும், ஸ்ரேயாஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் 20 போட்டிகளில் விளையாடி ரூ.1.20 கோடி ஊதியம் பெற்றுள்ளனர். அதேபோல் 8வது இடத்தில் முகமது ஷமி உள்ளார். அவர் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ரூ.1.14 கோடியும், பும்ரா மற்றும் இஷான் கிஷன் இருவரும் 17 போட்டிகளில் விளையாடி ரூ.1.02 கோடியும், ஷர்துல் தாக்கூர் 16 போட்டிகளில் விளையாடி ரூ.96 லட்சமும் ஊதியமாக பெற்றுள்ளார்.