7 சிக்ஸ்.. 8 ஃபோர்ஸ்.. திலக் வர்மா உலக கிரிக்கெட்டில் முதல் வீரராக சாதனை.. ரெய்னா ரெக்கார்ட் முறியடிப்பு

0
85

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி சதம் அடித்த திலக் வர்மா 14 ஆண்டுகளாக சுரேஷ் ரெய்னா நிகழ்த்திய சாதனையை தற்போது முறியடித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா தென்னாபிரிக்கா டி20 தொடர்

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இந்த முறையும் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதற்குப் பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 52 பந்துகளில் 107 ரன்கள் குவித்த நிலையில் 25 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்கள் என 50 ரன்கள் குவித்த அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் திலக் வர்மா சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

சாதனை படைத்த திலக் வர்மா

பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரமன்தீப் சிங், ரிங்கு சிங் ஆகியோர் குறைந்த ரன்களில் வெளியேறினாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 51 பந்துகளில் சதம் அடித்து தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் 56 பந்துகளை எதிர் கொண்டு எட்டு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் என 107 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனால் இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக உலக கிரிக்கெட்டில் 23 வயதுக்கு முன்னதாக சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: 27 ஓவர்.. நியூசிக்கு மழை வைத்த செக்.. இலங்கை அணிக்கு 2 சதம்.. முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி

மேலும் இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இதே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா சதம் அடித்தபோது அவருக்கு வயது 23 ஆண்டுகள் 156 நாட்களாக இருந்த நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு திலக் வர்மா தனது 22வது வயதில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இதற்கு அடுத்ததாக நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் தனது 26 வது வயதிலும், பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் அதே 26 வயதிலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தனது 27 வயதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -