கேப்டனா சொல்றேன்.. நீங்க பிளேயர்ஸ் இப்படித்தான் இருக்கணும்.. இதத்தான் செய்யணும் – சூரியகுமார் பேட்டி

0
531
Surya

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு முதல் முறையாக தற்காலிகமாக இந்திய டி20 கேப்டன் ஆக பொறுப்பேற்ற சூரியகுமார் யாதவ் தன் திட்டம் பற்றி பேசி இருக்கும் விஷயங்கள் தற்பொழுது வெளிவந்திருக்கிறது.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருந்ததோடு சிறப்பாகவும் செயல்பட்டு இருந்தார். எனவே கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இப்படியான நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் அடுத்த 2022 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடர் வரையில் சூரியகுமார் யாதவே கேப்டனாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் 2023 ஆம் ஆண்டு முதல் முறையாக ஹர்திக் பாண்டியா இல்லாத போது தற்காலிகமாக சூரியகுமார் யாதவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அப்பொழுது கேப்டனாக தன்னுடைய எதிர்பார்ப்பு மற்றும் திட்டங்கள் என்னவென்று அவர் பேசி இருந்தார். அது முழு நேர கேப்டனாக அவர் பொறுப்பேற்ற பிறகு தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

கேப்டன் பொறுப்பு குறித்து சூரியகுமார் யாதவ் “இந்த புதிய ரோலை நான் மிகவும் ரசிக்கிறேன். எங்கள் சக வீரர்கள் அனைவருடனும் நான் நேரம் செலவிடுகிறேன்.நாங்கள்அனைவரும் ஐபிஎல் தொடரில் ஒன்றாக விளையாடுகிறோம், மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். எனவே எனக்கு என்னுடைய வீரர்களின் பலம் மற்றும் பலவீனம் நன்றாகவே தெரியும். நாங்கள் வெளியேயும் நிறைய நேரம் செலவிடுகிறோம். மேலும் களத்திற்கு உள்ளேயும் நல்ல உறவு இருக்கிறது.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் செலக்சன் ஆச்சரியமா இருக்கு.. வித்தியாசமான டெம்ப்லேட் போட்டு பிசிசிஐயை விமர்சித்த வாசிம் ஜாபர்

எனக்கு எப்பொழுதும் வீரர்கள் விஷயங்களை எளிமையாக வைத்திருக்க வேண்டியது முக்கியம் என்று நினைப்பேன். நான் செயல்முறை சார்ந்த மற்றும் திட்டங்களை எளிமையாக வைத்துக் கொள்ள விரும்பக்கூடியவன். அனைவருக்கும்என்னுடைய அறிவுரை என்னவென்றால் விஷயங்களை எளிமையாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இன்னொரு வெர்சனாக இருக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்களாகவே இருங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -