டி20 உலகக் கோப்பை 2024

WT20 பைனல்.. உனக்கு சான்ஸ் தரலனு என்ன திட்றது தெரிது.. ஆனா காரணம் இதான்னு ரோஹித் சமாதானம் செஞ்சார் – சாம்சன் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த சஞ்சு சாம்சன் இறுதிப் போட்டியில் விளையாடாத சூழ்நிலையில் ரோஹித் சர்மா தன்னிடம் எவ்வாறு விளக்கினார் என்பது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இறுதிப் போட்டியில் விளையாடாத சஞ்சு சாம்சன்

இந்தியா சர்வதேச அணியில் இடம் பிடித்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாட இந்திய அணிக்கு தேர்வாகி இருந்தார். இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நிலையில் அதற்குப் பிறகு லீக் போட்டிகளில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் அரை இறுதியில் இங்கிலாந்து அணியை வென்ற பிறகு இறுதிப் போட்டியில் ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் ஆக சஞ்சு சாம்சன் விளையாட இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முந்தைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியுடனே இறுதிப் போட்டியில் களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா அது குறித்து தன்னிடம் எவ்வாறு விளக்கினார் என்பதை சஞ்சு சாம்சன் கூர் இருக்கிறார்.

- Advertisement -

நீ என்னை மனதிற்குள் திட்டுகிறாய்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “வார்ம் அப் செய்து கொண்டிருந்த போது ரோகித் சர்மா என்னை பக்கத்தில் அழைத்து இறுதி போட்டியில் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து என்னிடம் விளக்கத் தொடங்கினார். அவர் உனக்கு புரிந்ததா? இந்த முடிவு எதனால் எடுக்கப்பட்டது என்று புரிகிறதா என்று குறித்து கேட்டார். நான் அவரிடம் போட்டியில் வென்று முடித்த பிறகு அது குறித்து பேசுவோம், முதலில் போட்டியில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினேன்.ஒரு நிமிடம் கழித்து வந்து அவர் நீ என்னை மனதிற்குள் திட்டுகிறாய் என்று தெரியும்.

இதையும் படிங்க:எங்க டீம்ல சேர்ந்து.. இவங்க இந்திய அணியை தோற்கடிப்பதை நீங்க பாக்கதான் போறீங்க – இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பேட்டி

நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் மனதில் ஏதோ இருப்பது போல உணர்கிறேன். என்று கூற நாங்கள் சிறிது நேரம் விவாதித்தோம். நான் அவரிடம் ஒரு வீரராக விளையாட விரும்புகிறேன் என்று கூறினேன். இறுதிப் போட்டியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் விளையாட தயாராக இருந்தேன். இருப்பினும் டாஸ் போடப்படுவதற்கு முன்பாக அதே அணியுடன் செல்வது எனக்குத் தெரிந்தது. அதற்குப் பிறகு நான் அமைதியாக இருந்தேன். எனது மனநிலையும் அப்படித்தான் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts