4,4,4,4,4.. லேடி தோனி ரிச்சா கோஷ்.. ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் சாதனை.. அடிபொலி பேட்டிங்

0
828
Richa

தற்போது இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இன்று யுனைடெட் அரபு எமிரேடு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் வீராங்கனை ரிச்சா கோஷ் புதிய சாதனை ஒன்றை ஆசியக் கோப்பை வரலாற்றில் படைத்திருக்கிறார்.

இந்த போட்டிக்கான டாஸில் வென்ற யுனைடெட் அரபு எமிரேடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா 18 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த ஹேமலதா 4 பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து ஜெமிமா ரோட்ரிகியூஸ் 13 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். இந்திய அணி அதிரடியாக ஆரம்பித்தாலும் பின்பு விக்கெட்டுகளை இழக்க கொஞ்சம் ரன் வேகம் பாதித்தது.

இப்படியான நிலையில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் மற்றும் விக்கெட் கீப்பிங் வீராங்கனை ரிச்சா கோஷ் இருவரும் சேர்ந்து அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார்கள். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 45 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய ரிச்சா கோஷ் அரை சதம் அடித்தார். மேலும் போட்டியின் கடைசி ஓவரில் தொடர்ந்து ஐந்து பவுண்டரிகள் பறக்கவிட்டு அசத்தினார்.வெறும் 29 பந்துகளை மட்டுமே சந்தித்து 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் ஆட்டம் இழக்காமல் 64 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

மேலும் இன்று ரிச்சா கோஸ் அரைசதம் அடித்ததின் மூலமாக பெண்கள் ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் அரை சதம் அடித்த விக்கெட் கீப்பிங் வீராங்கனை என்கின்ற அரிய சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும் அவரது அதிரடியின் காரணமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதல் முறையாக 200 ரன்களை கடந்தும் இருக்கிறது.

- Advertisement -