சின்ன தல ரெய்னாக்கு இடம்.. கெயில் இல்லை.. அஸ்வின் வெளியிட்ட ஆல் டைம் ஐபிஎல் XI.. நிஜமாவே மாஸ் அணிதான்

0
134

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் முன்னாள் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் ஆன ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் குறித்த நிகழ்ச்சிகளில் தன்னை எப்போதும் ஆக்டிவாக வைத்துக் கொள்வார்.

ஐபிஎல் தொடரில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் 11 அணியை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவின் முன்னணி டெஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கிரிக்கெட் விளையாடாத நாட்களில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், தனது யூடியூப் சேனலில் கிரிக்கெட் குறித்த தனது கருத்துக்களை ரசிகர்களோடு பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு விளையாடும் அஸ்வின் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி அவரை தக்க வைக்குமா? அல்லது வேறு அணி அவரை எடுக்க வாய்ப்புள்ளதா? என்பது விரைவில் தெரியவரும்.

இந்த சூழ்நிலையில் பல ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் அஸ்வின் தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு தனது முன்னாள் சிஎஸ்கே கேப்டன் ஆன மகேந்திர சிங் தோனியை அவரது ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நியமித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவரது அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இருக்கிறார்கள். ரோஹித் சர்மாவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள நிலையில் அவரை தொடக்க ஆட்டக்காரராக அஸ்வின் தேர்ந்தெடுத்திருக்கிறார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக பெங்களூர் அணியின் நட்சத்திரம் விராட் கோலி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ‘மிஸ்டர் ஐபிஎல்’ என்று அழைக்கப்படும் இடது கை ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னாவை தேர்ந்தெடுத்துள்ளார்.

நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் ‘மிஸ்டர் 360 ‘ என்று அழைக்கப்படும் இந்தியாவின் சூரியகுமார் யாதவ் மற்றும் தென்னாபிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தொடர்கிறார். சுழற் பந்துவீச்சாளர்களில் சுனில் நரேன், ரஷித் கான் தொடர வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:நண்பன் ரோகித் ஐபிஎல் வேற டீம்க்கு போறாரா.. பணத்துக்காக தலைவலியை வாங்குவாரா? – அஸ்வின் பதில்

அஸ்வின் தேர்ந்தெடுத்த ஆல் டைம் சிறந்த ஐபிஎல் பிளேயிங் லெவன் :

ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், ஏபி டி வில்லியர்ஸ், எம்எஸ் தோனி,
(C&W), சுனில் நரைன், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, லசித் மலிங்கா.

- Advertisement -