எனக்கே என்னை நினைச்சு பெருமையா இருக்கு.. நான் மட்டும் அதை பண்ணலனா பிரச்சனையாகி இருக்கும்.. முகமது சிராஜ் பெருமிதம்

0
309

நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு மறக்க முடியாத போட்டியாக தற்போது அமைந்துள்ளது.

இந்திய அணியில் தனது பங்களிப்பு குறித்து மகிழ்ச்சி அடைந்ததாகவும், கடைசி கட்ட வீரர்கள் பேட்டிங் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததாகவும் முகமது சிராஜ் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பந்துவீச்சின் சொர்க்கமாக விளங்கிய நியூயார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கு இடையேயான முக்கிய டி20 கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியை 119 ரன்களில் சுருட்டினர். இந்த எளிய இலக்கை பாகிஸ்தான் வெற்றி பெற்று முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு ஆறுதல் தேடிக் கொள்ளும் என்று அனைவரும் எண்ணினர்.

ஆனால் இந்திய அணியின் மிக அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணிக்கு விக்கெட்டுகள் கையில் இருந்தும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து தற்போது அடுத்த சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டது. இந்த நிலையில் இந்திய அணியில் கடைசியாக களமிறங்கி முகமது சிராஜ் குவித்த அந்த ஏழு ரன்கள் இரு அணிகளுக்கிடையே பெரிய வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் அந்த ஆறு ரன்கள் வித்தியாசத்தால்தான் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கூறும்பொழுது
“கடைசியாக எனது 7 ரன்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்கிறேன். அந்த ஏழு ரன்களில் வெற்றி பெற்றது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த தருணத்தில் என்னை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. ஏனென்றால் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பது மிகப்பெரிய போட்டி.

பேட்டிங்கில் நான் நிறைய பயிற்சிகளை செய்துள்ளேன். ஐபிஎல் தொடரில் நான் செய்த பேட்டிங் பயிற்சிகள் எனக்கு நன்றாக கை கொடுத்தது. ஏனெனில் டெயில்எண்டர்கள் இறுதியில் அடிக்கும் ரன்கள் மிகவும் முக்கியமானது. அந்தப் போட்டியில் இலக்கு குறைவாக இருந்ததால் பந்து வீச்சில் புதிதாக எதையும் முயற்சி செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

இதையும் படிங்க:சிஎஸ்கே வீரர் இனி அணியில் வேண்டாம்.. அவருக்கு பதிலா இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுங்க.. அம்பத்தி ராயுடு பேட்டி

மிகவும் எளிமையாக பந்து வீசி ஒரே திட்டத்தை செயல்படுத்துவோம் என்று நினைத்தேன். ஒருவேளை எனது பந்துவீச்சை பாகிஸ்தான் வீரர்கள் அடித்தால் அது நல்ல ஷாட் ஆக இருக்கும். அதனால்தான் நான் தொடர்ந்து ஒரே இடத்தில் பந்து வீச முயற்சி செய்தேன் அது எனக்கு கை கொடுத்தது” என்று முகமது சிராஜ் கூறி இருக்கிறார். இந்திய அணி தனது அடுத்த போட்டியை இதே நியூயார்க் மைதானத்தில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

- Advertisement -