நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியதும், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். இதுகுறித்து இந்திய அணி வீரர் முகமது சமி பேட்டி அளித்திருக்கிறார்.
அடுத்து 2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க இருக்கிறது. தற்போது சிறந்த நிலையில் இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சொந்த நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் டி20 உலகக்கோப்பையை வென்று ஓய்வை அறிவித்து விட்டார்கள்.
காயத்தின் காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வரும் முகமது சாமி இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றியது தொடர்பாகவும், மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றது தொடர்பாகவும் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து முகமது சமி பேசும்பொழுது “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே நேரத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் கடந்த 15, 16 ஆண்டுகளாக வெள்ளைப் பந்து வடிவத்தில் இந்தியா அணிக்காக சிறப்பாக விளையாடி அரசர்களாக இருக்கிறார்கள். இதனால் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் இதுதான் இயற்கை என் நியதி. இருந்தாலும் கூட இவர்கள் இருவரின் இடத்தை நிரப்புவது சவாலான ஒன்றாக இருக்கும்.
நீங்கள் உங்கள் இலக்கை அடைந்த பிறகு அங்கிருந்து ஓய்வு பெறுவது என்பது மிகவும் உணர்ச்சிகரமான ஒன்றாக இருக்கும். அணிக்காக போட்டிகளை வென்றதற்காகவும், இந்தியாவுக்காக அற்புதமான முறையில் பேட்டிங் செய்ததற்காகவும், மேலும் பல சாதனைகளை முறியடித்து இருப்பதற்காகவும், நான் இருவருக்குமே நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதையும் படிங்க : பாஸ்போர்ட் மொபைல் எல்லாத்தையும் மறந்துட்டேன்.. புது இந்திய டீம்தான் ஆனா இந்த விஷயம் பழசு – ரியான் பராக் பேட்டி
உலக கோப்பையை வெல்லும் அணியில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் 10% வீரர்களுக்குத்தான் உலகக் கோப்பை வெல்லும் அணியில் இடம்பெறும் பாக்கியம் கிடைக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






