இந்திய கிரிக்கெட்

முன்னாள் சிஎஸ்கே வீரர் சதம் வீண்.. புதிய உலக சாதனை படைத்த கருண் நாயர்.. விஜய் ஹசாரே ட்ராபி 2024-25

இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே டிராபி 2024-25 புகழ்பெற்ற ஒருநாள் வடிவ கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் குரூப் டி பிரிவில் நடைபெற்ற ஆறாவது சுற்றில் விதர்பா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதி விளையாடினர்.

- Advertisement -

இதில் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் சிறப்பாக விளையாடி உலக சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

விஜய் ஹசாரே ட்ராபி 2024-25

இதன் குரூப் டி பிரிவில் நடைபெற்ற ஆறாவது சுற்று ஆட்டத்தில் விதர்பா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தரப்பிரதேச அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முன்னாள் சிஎஸ்கே வீரரான சமீர் ரிஸ்வி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 82 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் என 105 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விதர்பா அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் யாஷ் ரத்தோடு 140 பந்துகளில் 138 ரன்கள் குவிக்க, மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய அணியின் கேப்டன் கருண் நாயர் 101 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 112 ரன்கள் குவித்தார். இதனால் விதர்பா அணி 47வது ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

புதிய உலக சாதனை படைத்த கருண் நாயர்

இந்த சூழ்நிலையில் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் உலக சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். கருண் நாயர் இந்த லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக 112 ரன்கள் குவித்து சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மேலும் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 44 ரன்கள், சண்டிகர் அணிக்கு எதிராக 163 ரண்களும், தமிழ்நாடு அணிக்கு எதிராக 116 ரன்களும் குவித்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் 112 ரன்கள் குவித்து தொடர்ச்சியாக மூன்றாவது சதமும் இந்தத் தொடரில் நான்காவது சதமும் அடித்திருக்கிறார்.

இதையும் படிங்க:யாருமே இதை செய்யாதப்போ.. ரிஷப் பண்ட் அடி வாங்கி போராடுனாரு.. இது அவரோட பெஸ்ட் – இர்பான் பதான் பேட்டி

இந்த நிலையில் லிஸ்டி ஏ கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃப்ராங்களின் 527 ரன்கள் குவித்திருந்தது இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில் கருண் நாயர் தற்போது 542 ரன்கள் குவித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். கருண் நாயர் ஏற்கனவே 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வீரேந்திர சேவாக்குக்கு பிறகு மூன்று சதங்கள் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் கருண் நாயர் ஆவார்.

- Advertisement -
Published by