வீடியோ.. இந்திய வீரரின் சர்ச்சை நோ-பால்.. கிரிக்கெட் உலகில் கிளம்பிய பரபரப்பு.. பாக் வீரருடன் ஒப்பிட்டு சந்தேகப்படும் ரசிகர்கள்..!

0
439

அபுதாபி டி10 லீக்கில் இந்திய வீரர் அபிமன்யு மிதுனின் வினோதமான நோ-பால் சமூக ஊடகங்களில் ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

T10 லீக் விரைவில் கிரிக்கெட் பிரியர்களுக்கான சிறந்த பொழுதுபோக்கின் போட்டியாக மாறியுள்ளது. முதலில் 60 ஓவர் போட்டி 50 ஓவராக மாற்றபட்டது. பின்னர் நாளைடைவில் 50 ஓவர் போட்டி மெருகேற்றப்பட்டு 20 ஓவர் போட்டியாக மாற்றபட்டது. தற்போது இதன் வடிவம் இன்னும் மாறி 10 ஓவர்களாக குறைகபட்டுள்ளது.

- Advertisement -

அபுதாபியில் நடைபெற்ற டி10 லீக் 14வது போட்டியில் வாரியர்ஸ் மற்றும் சென்னை பிரேவ்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த வாரியர்ஸ் அணி 10 ஓவர்களில் முடிவில் 106 ரன்களைக் குவித்தது. ஆரம்ப முதலை அதிரடியாக விளையாடிய வாரியர்ஸ் அணியில் ஹஸ்ரத்துல்லா சசாய் அதிக பட்சமாக 54 ரன்கள் குவித்தார். சென்னை அணியில் நபி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய சென்னை அணி 9.4 ஓவர்கள் முடிவில் 107 குவித்து வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 1பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் குவித்தார். அந்த அணியில் அசலங்கா மற்றும் ஸ்டீவ் எஸ்கினாஸி ஆகியோர் 22 ரன்களைக் குவித்தனர். வாரியர்ஸ் அணியில் மிதுன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதில் ஆட்டத்தின் 4.3வது ஓவரில்
வாரியர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் நோ-பால் வீசியதன் மூலம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது.

அபிமன்யு மிதுன் பந்துவீசும்போது ஓவர்-ஸ்டெப் செய்தார், ஆனால் அவரது காலுக்கும் கிரீஸுக்கும் இடையிலான தூரம் அனைவரையும் திகைக்க வைத்தது.

சம்பவம் நடந்த உடனேயே, மிதுனின் ஆடம்பரமான நோ-பால் படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவியது, இது அதிக அளவில் சோசியல் மீடியா ரசிகர்களால் பகிரபட்டு வருகிறது.

இந்த சம்பவம் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் 2010ல் பிக்சிங் செய்தபோது, மிகப்பெரிய நோபல் வீசி தடை செய்யப்பட்டதை ஞாபகப்படுத்துவதாகவும் சில ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் தற்போது முன்னாள் இந்திய வீரர் வீரர் மிதுன் வீசிய பந்து தற்செயலாக இருக்கலாம் எனவும் சில ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.