கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் கௌதம் கம்பீர் பொறுப்பேற்றார்.
இந்த சூழ்நிலையில் போட்டிகளின் போது விமர்சனம் செய்யும் வர்ணனையாளர்கள் குழு குறித்து கம்பீர் சில கடுமையான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
கௌதம் கம்பீர் தாக்கு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையோடு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக, அவருக்கு பதிலாக கௌதம் கம்பீர் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆனால் அந்த பொறுப்பு அவருக்கு போதுமான அளவு ஏற்றங்களை கொடுக்கவில்லை. வெற்றி தோல்வி என கலவையான வெற்றி விகிதத்தையே அவருக்கு கொடுத்தது.
இதில் குறிப்பாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களின் படு தோல்விகளுக்குப் பிறகு துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் போட்டிகளின் போது செயல்படும் வர்ணனையாளர்கள் குழு தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கௌதம் கம்பீர் சில கடுமையான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
உங்களை மகிழ்விப்பது வேலையல்ல
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொண்ட போது இதில் ஏற்றம் மற்றும் இறக்கம் என இரண்டும் இருக்கும் என்று நன்றாகவே தெரியும். குளிரூட்டப்பட்ட வர்ணனை பெட்டியில் அமர்ந்திருப்பவர்களை மகிழ்விப்பது என் வேலையல்ல. நாட்டை பெருமைப்படுத்துவதே எனது முதன்மையான குறிக்கோள். 25 ஆண்டுகளாக வர்ணனை பெட்டியில் அமர்ந்திருக்கும் சிலர் கிரிக்கெட்டை தங்கள் குடும்பம் என்று கருதுகிறார்கள். இது இந்திய மக்களுக்கு மட்டுமே சொந்தமானது.
இதையும் படிங்க:உலக சாதனை இடத்தை.. இந்திய டீம்ல என்னை நம்பி தந்தது இந்த 2 பேர்தான்.. நம்ப காரணம் இதுதான் – விராட் கோலி பேட்டி
அச்சமின்றியும் பெருமையுடனும் விளையாடும் ஒரு அணியை உருவாக்குவது மட்டுமே இங்கு இருக்கக்கூடிய வேலை” என்று கௌதம் கம்பீர் கூறி இருக்கிறார். அதாவது தனது பணி குறித்து விமர்சனம் செய்த வர்ணனையாளர்களுக்கு கௌதம் கம்பீர் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.






