2022ஆம் ஆண்டு இந்திய அணி விளையாடும் முழு அட்டவணை; புதிய தொடர்கள் சேர்ப்பு!

0
1220
Indian cricket team

இந்திய அணி ஐபிஎல் தொடருக்குப் பிறகு அடுத்தடுத்து பல தொடர்களில் பங்கேற்று வருகிறது. முதலில் உள்நாட்டில் வைத்து செளத்ஆப்பிரிக்கா அணியோடு ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியது. அடுத்து அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், அதற்கடுத்து இங்கிலாந்து அணியோடு மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடியது.

இங்கிலாந்தில் இருந்து வெஸ்ட் இன்டீஸ் பறந்து முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அடுத்து ஐந்து போட்டிகள் டி20 தொடரில் பங்கேற்று தற்போது 2-1 என மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இந்தத் தொடரில் மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மகாணத்திலுள்ள மைதானத்தில் ஆகஸ்ட் 5
6, 7ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது!

- Advertisement -

இதையடுத்து இந்திய அணி ஜிம்பாப்வே சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு மூத்த வீரர் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட ஒரு அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் நடக்கிறது!

ஷிகர் தவானின் தலைமையில் இந்த இளம் அணி ஜிம்பாப்வேயில் ஆடி முடிக்க, இந்தியாவின் நட்சத்திர அணி யு.ஏ.இ-ல் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்கிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தானோடு ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய அணி மோதுகிறது!

இதையடுத்து இந்திய அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணியோடு செப்டம்பர் 20, 23, 25 ஆம் தேதிகளில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும்,அடுத்து மீண்டும் உள்நாட்டிலேயே செப்டம்பர் 28 முதல் மூன்று டி20, மூன்று ஒருநாள் கொண்ட இரு தொடர்களிலும் இந்திய அணி விளையாடுகிறது. இதையடுத்து இந்திய அணி அக்டோபரில் டி20 உலகக்கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியா செல்கிறது!

- Advertisement -

அடுத்து நவம்பர் மாதம் நியூசிலாந்து செல்லும் இந்திய அணி நவம்பர் 18, 20, 22 ஆகிய தேதிகளில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், நவம்பர் 25, 27, 30 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது!

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் இந்திய அணி பங்களாதேஷ் அணியோடு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கடுத்து ஆண்டின் இறுதி டிசம்பர் மாதத்தில் தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் இலங்கை அணியோடு உள்நாட்டில் விளையாடுகிறது!